நாலு தரப்புக்கும் மகிழ்ச்சி அளித்த தேர்தல் முடிவுகள்!

கட்டுரைகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

pm modi - 2026

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (மே.23) காலை 8 மணிக்கு தொடங்கியது. அது முதலே, பாஜக., கூட்டணி பல இடங்களிலும் முன்னிலை பெற்றது.

மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு  தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் 22 சட்டசபை  தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்துள்ளது.  அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலும்  நடந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கே சந்திரபாபு நாயுடு படுதோல்வியை சந்தித்துள்ளார். மாநிலத்தில் ஆட்சியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பறிகொடுத்துள்ளார். அதே நேரம், மத்திய அமைச்சரவையில் நான்கரை வருடம் இருந்துவிட்டு, கடைசிக் கட்டத்தில் கூட்டணியை முறித்துக் கொண்டு, தனித்துப் போட்டியிட்டு, தோல்வியை சந்தித்து, ஒரு எம்பி.,கூட பெற இயலாத நிலையில் இருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

rahul modi - 2026அதே நேரம் ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. அது தொடர்ந்து 5வது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வித்தியாசமான கோணத்தில் சென்று கொண்டிருக்கின்றன. கேரளத்திலும் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

stalin duraimurugan - 2026அதேபோல் தமிழகத்தில் ஆளும் கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. திமுக., கூட்டணி பெரும் வெற்றி அடைந்துள்ளது. அதே நேரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக.,வுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. ஆனால் தமிழக அரசுக்கு பாதகம் இல்லாத தீர்ப்பினை தமிழக மக்கள் வழங்கியிருக்கின்றனர்.

foundation stone laying ops eps - 2026

இந்த நான்கு அம்சங்களையும் குறிப்பிட்டு… எல்லாரும் கொண்டாட வழி வகுத்த தேர்தல் முடிவுகள்.

தேசிய அளவில் மோடி ஆட்சி – பாஜக மகிழ்ச்சி.

தமிழகத்தில் பா.ம தேர்தலில் திமுக வெற்றி – திமுக மகிழ்ச்சி.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி – அதிமுக மகிழ்ச்சி.

காங்கிரஸ் தேசிய அளவில் பெறும் தோல்வி – நாடே மகிழ்ச்சி! – என்கின்றனர் சமூக வலைத்தளங்களில்!

திமுக ஜெயித்தது – ஆனால் ஆட்சி கிடைக்கல!
அதிமுக தோற்றது  – ஆனால் ஆட்சியை விடல !
பாஜக இங்க வரல  – ஆனால் இந்தியாவே அதன் கையில!
இது தான் ஆண்டவன் கட்டளை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.