
செங்குன்றம் அடுத்துள்ள சோழவரத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்த அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பந்தபட்ட இடத்தில் சோதனை செய்தபோது அங்கு சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது
பின்னர் அதனை கைப்பற்றிய போலீசார் இதில் சம்பந்தபட்டுள்ள வீட்டின் உரிமையாளரை வலை வீசிதேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பொன்னேரி அடுத்த சோழவரம் மசூதி தெருவில் வசித்து வரும் நாகராஜ். இவரது வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக சோழவரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் படி சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தவீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
அப்போது போலீசார் வருவதை பார்த்து வீட்டின் உரிமையாளர் நாகராஜ் தப்பி ஓடினார்.அப்போது அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு செம்மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த ரூ. 45 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தலைமறைவான வீட்டின்
உரிமையாளரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து இருப்பதால் நாகராஜூயுடன் கடத்தல் கும்பல் சேர்ந்து இந்த செயலை செய்து வருகின்றதா என்றும் கடத்தல் கும்பலுக்கும் அவருக்கும் உ ள்ள தொடர்பு குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்து சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



