தமிழகத்தில் சாராய ஆலை வைத்திருப்பதே தி.மு.க. தான்; கனிமொழியை சாடிய தமிழிசை சௌந்தரராஜன்…!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம்

tamilisai soundarrajan 1 - 2026

தமிழகத்தில் சாராய ஆலை வைத்திருப்பதே தி.மு.க. தான் என மதுக்கடையை மூடக்கோரி மனு அளித்த கனிமொழியை தமிழிசை சௌந்தரராஜன் சாடியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது,

தமிழகத்தில் இந்தி எந்த விதத்திலும் திணிக்கப்பட மாட்டாது, தமிழ் மீதான உணர்வு மற்றவர்களைவிட பா.ஜ.க.விற்குதான்  அதிகம் உள்ளது.

எதிர்க்கட்சிகள் இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி, போராட்டம் நடத்தி மக்களை திசை திருப்பி தான் வெற்றி பெற்றன. இப்போதும் அதனை தொடரவும் நினைக்கின்றன.

தூத்துக்குடி மக்களிடம் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றி வருவேன், வருங்காலத்தில் அவர்கள் எனக்கு நிச்சயமாக வெற்றியை தருவார்கள் என்று கூறினார்.

தமிழகத்தில் சாராய ஆலை வைத்திருப்பதே தி.மு.க. தான், ஆனால் கனிமொழி தூத்துக்குடியில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.