
தடா. பெரியசாமியின் கருத்துக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன்சம்பத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஒரு சினிமாவை பக்கத்தில் கூட எவரையும் உட்கார விடாமல், ஒரு தீண்டாமைச் சுவரை தன்னைச் சுற்றி அமைத்துக் கொண்டு, ஒண்டியாகப் படம் பார்த்து, பஞ்சமி நிலம் மீட்பு குறித்து படத்தைப் பாராட்டி ஒரு கருத்தைச் சொன்னதில் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலினின் பஞ்சமி நில மீட்பு குறித்த பேச்சு, பாமக., நிறுவனர் ராமதாஸால் மேலும் கிளறப் பட்டது. இதை அடுத்து அது இருவருக்குமான வாய்த்தகராறு ஆகி விட்டது.

இந்நிலையில் பாமக., நிறுவுனர் ராமதாஸின் கருத்தை வரவேற்று தடா பெரியசாமி ஒரு கருத்தைப் பதிந்துள்ளார். அதில்…
Dr .ராமதாஸ் அவர்கள் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தின் இடம் என்று குறிபிப்பிட்டது #உண்மையே! ஸ்டாலின் அவர்கள் காட்டும் பட்டா 1985 க்கானது. 1923 நிரந்தர கணக்கு பதிவேடு( Permanent Register ), RSR( Re-settlement Paisal Register ), SLR(Settlement Land Register) மற்றும் 1935 ன் Gazette Copy ஆகியவற்றில் மேற்படி சர்வே எண் பற்றி தெரிந்து கொண்டு ஸ்டாலின் அவர்கள் பேசவேண்டும்.
முதலில் ஒரு தலித்துக்கு சொந்தமாக இருந்து பிறகு இரண்டு தலித் அல்லாதவர்களுக்கு கை மாற்றப்பட்டு, 4 வதாகத்தான் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு வாங்கியுள்ளனர்.1985 ஆவணத்தின் மூலத்தை காண்பிப்பேன் என்பது #வாய்சவடாலே!
Dr .ராமதாஸ்,ஸ்டாலின் ஆகியவர்களுக்கிடையான பிரச்சினையின் வழியாக தலித் மக்களின் பஞ்சமி நில மீட்புக்கு #தீர்வு_கிடைக்கட்டும்.
– தடா. பெரியசாமி
தடா பெரியசாமியின் இந்தக் கருத்தை வரவேற்றுள்ளார், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் !



