ஜெயிச்சாலும் வெற்றி பெற முடியாது..#ஆக_பரிதாபங்கள் … சுடலை பரிதாபங்கள்..
தேர்தல்ல நிக்க முடியாது… நின்னாலும் ஜெயிக்க முடியாது.. ஜெயிச்சாலும் வெற்றி பெற முடியாது…
தேர்தல்கள் வந்தாலும் வந்தது.. திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு உளறல்களை தமிழக வாக்காள, ரசிகப் பெருமக்கள் கேட்கக் கூடிய நல் பாக்கியம் கிடைத்திருந்தது. அதனை வீடியோ பதிவிட்டு, சமூகத் தளங்களில் பரப்பி, மேலும் பலரை நகைச்சுவையுடன் நாளைப் போக்குவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
தற்போது மு.க.ஸ்டாலினின் லேட்டஸ்ட் உளறலாக… ஜெயிச்சாலும் வெற்றி பெற முடியாது என்பது வைரலாகி வருகிறது.
இந்நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் டிவிட்டரில் ஒருவர் பதிவு செய்திருக்கும் கருத்து…
elavasam@elavasam·16mReplying to @mayavarathaanஜெயிப்பது என்பது வடமொழி. வெற்றி பெறுவது என்பது தமிழ். ஜெயித்தாலும் வெற்றி பெற முடியாது என்றால் வடநாட்டில் வென்றாலும் தமிழகத்தில் வெல்ல முடியாது என்று பாஜகவின் தற்போதைய நிலையை தளபதி எடுத்துச் சொல்கிறார். இது கலைஞரின் தமிழைக் கேட்டு வளர்ந்தவர்களுக்குப் புரியும். #200கிடைக்குமா