நயினார் நாகேந்திரனின் தந்தை காலமானார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

nainar nagendran father - 2026

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் தந்தை நயினார் தேவர் இன்று காலை 9 மணிக்கு காலமானார். உடல் அவருடைய சொந்த ஊரான பணகுடி அருகே உள்ள தண்டையார்குளத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என கூறப்படுகிறது.

நெல்லையைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் அண்மையில் பாஜக.,வில் இணைந்து ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

நைனார் தேவரின் மறைவுக்கு பாஜக., தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1 thought on “நயினார் நாகேந்திரனின் தந்தை காலமானார்!”

  1. அன்னாரது மறைவுக்கு இரங்கல்கள். காலமான திரு நைனார் தேவர் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். மேலிருந்து அவரது ஆத்மா எல்லோரையும் வழி நடத்துவதாக. அவரது பிரிவால் வாடும் திரு நைனார் நாகேந்திரன் அவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.