பாகிஸ்தான் to இந்தியா.. மேலும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை!

Tunnel-1
Tunnel-1

காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்கப்பாதையை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள காஷ்மீரின் கதுவா மாவட்டத்திலிருந்து ரகசிய சுரங்கப்பாதையை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு ரகசியமாக வருவதற்கு ஏதுவாக இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நான்காவது சுரங்கப்பாதை இது என்றும் சர்வதேச எல்லையைத் தாண்டி வர இந்த சுரங்கப்பாதைகளைப் பயங்கரவாதிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

மேலும், சர்வதேச எல்லையில் ஆளில்லா விமானங்கள் மூலம் உணவு மற்றும் ஆயுதங்களைப் பாகிஸ்தான் போட்டுச் செல்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்.எஸ் ஜாம்வால் கூறுகையில், “சுமார் 150 முதல் 175 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதையைச் சர்வதேச எல்லையில் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். சுமார் 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, 2 முதல் 3 மீட்டர் சுற்றளவு கொண்டது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இந்த சுரங்கப்பாதை ஆறு முதல் எட்டு ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இந்த சுரங்கப்பாதை மிகவும் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. சரியாக இதே இடத்தில்தான் கடந்தாண்டு ஜூன் 20ஆம் தேதி பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது” என்றார்.

முன்னதாக, கடந்த ஜனவரி 13ஆம் தேதி பாபியன் கிராமத்தில் 198 கிலோமீட்டர் நீளமுள்ள ரகசிய சுரங்கப்பாதையை எல்லைப்பாதுகாப்பு படை கண்டுபிடித்தது. அதேபோல, கடந்தாண்டு ஆகஸ்ட் 28, நவம்பர் 22 ஆகிய தேதிகளில் காஷ்மீரின் சம்பா மாவட்டத்திலும் இதேபோன்ற இரண்டு சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories