ஆப்கன் அணியை எளிதில் வீழ்த்திய நியூஸி, அணி

சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

nz vs afg - 2026உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது ஆட்டத்தில் நியுசிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி பேட்டிங் செய்யக் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் நூர் அலியும் ஹஸ்ரத்துல்லாவும் 31, 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த வீரர்கள் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

ஹஸ்மத்துல்லா மட்டும் 59 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான், 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களே எடுத்தது.

173 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்க்கிய நியூசிலாந்து அணியில் முதல் பந்தில் குப்டில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் பின்னர் வந்த முன்ரோ 22 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் வில்லியம்சன் 79 ரன் எடுத்தார். டெய்லர் 48 ரன் அடித்து வெற்றியை எளிதாக்கினர். நியூஸி அணி 32 ஓவரில் 3 விக்கெட் இழந்து 173 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் 14-வது போட்டியில் இந்தியாவும் – ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.