வாட்ஸ்அப்பில் வைரலான வீடியோ! சாமி கும்பிடப் போனமா வந்தமான்னு இல்லாம.. இது தேவையா?!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் நகைச்சுவை லைஃப் ஸ்டைல்

gujarat lady under temple elephant statue - 2026

தமிழகத்தில் பல கோயில்களில் மண்டபத்தின் முன்னர் யானை சிலைகள் இருக்கும். அவற்றில் ஏறி அமர்ந்து, யானையின் மீது சவாரி செய்வது போல் சிறுவர் சிறுமியர் விளையாடுவது வழக்கம்.

ஆனால், குஜராத்தில் விபரீதமாக ஒரு பெண்மணி, யானை சிலையைக் கண்டதும் வேறு விதமான முயற்சியை மேற்கொண்டு, உயிர் போய் உயிர் வந்த அனுபவத்தைப் பெற்றார்.

குஜராத்தில் கோவிலுக்கு சாமி கும்பிடப் போன உடல் பருமனான பெண்மணி ஒருவர், என்ன வேண்டுதலோ… திடீரென அங்கிருந்த யானையின் சிலைக்கு அடியில் படுத்துக் கொண்டு, யானை சிலையின் கால்களுக்கு நடுவே உடலை நுழைக்க முயன்று மாட்டிக் கொண்டார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

குஜராத் கோவிலில் பெண் ஒருவர் சாமி தரிசனம் செய்து விட்டு, அங்கே இருந்த யானை சிலையைப் பார்த்து ஒரு விபரீத முயற்சியினைச் செய்துள்ளார். சற்றே உடல் பருமனான அந்தப் பெண்மணி, விளையாட்டாக சின்ன யானை சிலையின் கால்களுக்குள் தன் உடலை நுழைத்து, யானையின் கால்களுக்கு நடுவே படுத்துக் கொண்டு செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால், சிறிய இடைவெளியில், அவரது பருமனான உடல் வெளியில் வர ஒத்துழைக்கவில்லை. அவரால் வெளியில் வரவும் முடியவில்லை. இதனால் பயந்துபோன அந்தப் பெண்மணி, நீண்ட நேர போரட்டத்துக்குப் பின்னர், அங்கிருந்தவர்களால் மீட்கப் பட்டார்.

இந்த வீடியோ இப்போது வாட்ஸ் அப் வாயிலாக வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.