ஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம்

arumugasamy commission - 2026

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுக.,வினர் கூறினர். மேலும் தற்போதைய துணை முதல்வர், அப்போதைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’ என்ற பெயரில் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து ஒரு போராட்டம் நடத்தினார்.

ஓ.பன்னீர்செல்வம் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார். இதை அடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து அறிய, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது.

இந்த ஒருநபர் விசாரணை ஆணையம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் விசாரணை செய்து வருகிறது. இந்த ஆணையத்தின் கால அவகாசம் மீண்டும் மீண்டும் நீட்டிக்கப் பட்டு வந்தது. அதே போல் நேற்றுடன் அதன் கால அவகாசம் முடிந்த போதும்,  தற்போதும் மீண்டும் நீட்டிக்கப் பட்டுள்ளது.  இதை அடுத்து மேலும் 4 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.