செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., ஜோதிமணி எம்.பி., கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்

karur senthilbalaji jothimani - 2026

கரூர் மாவட்ட ஆட்சியரும், அப்போதைய தேர்தல் அதிகாரியுமான த.அன்பழனை மிரட்டிய வழக்கில் அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ வும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி மற்றும் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

மக்களவைத் தேர்தலின் போது மாவட்ட ஆட்சியர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி.,ஜோதிமணி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி ஆகியோர் கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 25) ஆஜராகினர்.

jothimani - 2026ஜோதிமணியின் முகவர் வழக்கறிஞர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்காக அவரது வீட்டிற்கு இரவு நேரத்தில் சென்றதாகக் கூறினார். ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தன்னை வீடு புகுந்து மிரட்டியதாக கலெக்டர் அன்பழகன் புகார் அளித்தார். மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

ஆட்சியரின் புகாரின் பேரில்,  செந்தில்பாலாஜி, ஜோதிமணி மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார் அவருடன் சென்ற 50 பேர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி, வழக்கறிஞர் செந்தில் குமார் ஆகியோர் கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகார்த்தி முன்பு இன்று  ஆஜராகினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.