டிடிவி தினகரனுக்கு தங்க தமிழ்ச்செல்வன் கேட்கும் ‘சாட்டையடி’ கேள்விகள்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

thangatamilselvan - 2026

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலக்கப் படுவார் என்று  கூறப் படும் தங்க தமிழ்ச்செல்வன் தன் மீது டிடிவி தினகரன் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கேள்வி கேட்டுள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வன் இன்று காலை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்.

என்னை யாரோ இயக்குவதாக டிடிவி தினகரன் கூறுகிறார். அமைச்சா்கள் வேலுமணி, தங்கமணி என யாரும் என்னை இயக்கவில்லை. அவா்களுடன் நான் பேசியதும் இல்லை!

18 சட்டமன்ற உறுப்பினா்கள் உங்களுக்கு சாதகமாக செயல்பட்டு பதவி இழந்து நிற்கின்றனா். அப்படிப்பட்ட சூழலில் மக்களவைத் தோ்தலில் கவனம் செலுத்தியது எதற்காக?

சட்டமன்ற இடைத் தோ்தலை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மக்களவைத் தோ்தலிலும் போட்டியிட்டதுதான் தோல்விக்குக் காரணம்.

டிடிவி தினகரன் கட்சிப் பணிகளைப் பார்க்காமல், பொய் பேசுவது, வீடியோ வெளியிடுவது, ஆடியோ வெளியிடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஓ.பன்னீா்செல்வம், பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சா் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இவரை மறைமுகமாக தொடா்பு கொண்டதை வெளிப்படையாகப் பேசியது தவறு.

தொடா்ந்து ஸ்லீப்பா் செல், ஸ்லீப்பா் செல் என்று பேசி வருகிறார். எத்தனை நாட்களுக்குத் தான்  ஸ்லீப்பா் செல் என்ற வார்த்தையை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற முடியும்?

தினகரன் அரசியல் கட்சித் தலைவா்போல் அல்லாமல் தீவிரவாத இயக்கங்களின் தலைவர் போல் செயல்படுகிறார்.

கூவத்தூா், கா்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் எங்களை அடைத்து வைத்தது எதற்காக?

பதவி இழந்த 18 சட்டமன்ற உறுப்பினா்களின் குடும்பமும் மிகுந்த கவலையில் உள்ளது என்பதை அறிய வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.