kumarasamy villagers - 2026

வேலைவாய்ப்பு கேட்டு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களிடம், “நீங்க மோடிக்கு தானே ஓட்டு போட்டீங்க… அவர்கிட்டயே போயி கேளுங்க” என கோபமாகப் பேசி வாக்குவாதம் செய்துள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

கர்நாடக மாநிலம் காரேகுட்டா பகுதிக்குச் சென்ற மாநில முதல்வர் குமாரசாமி, மற்றும் அமைச்சர்கள் சென்ற வாகனங்களை ராய்சூர் பகுதியில் வழி மறித்தனர் எர்மாரஸ் அனல்மின் நிலையப் பணியாளர்கள்!

அவர்கள் தங்களுக்கு நிரந்தப் பணி வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர்! அதற்காக சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போலீசார் அவர்களிடம் சமாதானப் பேச்சு நடத்தினர். ஆனால் அவர்கள் முதல்வர் குமாரசாமியின் வாகனத்திற்கு வழிவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தனது வாகனத்துக்குள் வெகு நேரம் பொறுமையாக அமர்ந்திருந்த முதல்வர் குமாரசாமி, நேரம் ஆக ஆக, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார். திடீரென தனது வாகனத்தின் கண்ணாடியைத் தள்ளிவிட்டு தலையை வெளியே நீட்டி,   போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கோபமாக வழிவிடுமாறு கூறினார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

அவர்கள் சமாதானம் அடையாமல் மேலும்கேள்விகளை கேட்டும், ஷேம் ஷேம் என்று கோஷம் எழுப்பியதைக் கேட்டும் கோபம் அடைந்த குமாரசாமி, எனக்கா ஓட்டு போட்டீர்கள்? எனக்கு ஓட்டு போடாததால் வேலை கிடையாது. மோடிக்கு தானே ஓட்டு போட்டீர்கள். போய் மோடியிடமே வேலை வேண்டும் என கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள். வழிவிடுங்கள் என கத்தினார்.

கர்நாடக முதலமைச்சரின் இந்தக் காட்டுக் கத்தல் பேச்சு, இப்போது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending