பிறந்தநாளில் ஐசிசி அளித்த கௌரவம்! ஓய்வு குறித்து எனக்கே தெரியாது என்கிறார் தோனி!

லைஃப் ஸ்டைல் விளையாட்டு

dhony csk - 2026

இந்த உலகக் கோப்பை தொடருடன், தோனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக செய்தி வெளியானது. இது உலகெங்கும் தோனி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் ஏபிபி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தோனி கூறியபோது, தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் எனக்கில்லை. ஓய்வு பெறுவது குறித்து நான் இப்போது ஆலோசிக்கவுமில்லை. ஆனால் சிலர் இன்று நடக்கும் இலங்கை போட்டியோடு நான் ஓய்வு பெற வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆயினும் நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்று எனக்கே தெரியாது” என்று கூறியுள்ளார்.

இன்று தோனி தனது 38-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதை அடுத்து தோனியைக் கெளரவப்படுத்தும் விதமாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது ஐசிசி. இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய தோனி என்ற தலைப்பில் உள்ள அந்த வீடியோவில் தோனியின் சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் கோலி, பும்ரா, ஸ்டோக்ஸ், பட்லர் என பிரபலமான வீரர்கள் தோனியின் பங்களிப்பைப் பாராட்டிப் பேசியுள்ளனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.