கனிமொழி வெற்றியை எதிர்த்து… தமிழிசை வழக்கு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

kanimozhi thamizisai - 2026

தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் திமுக., சார்பில் போட்டியிட்டு வென்ற கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, பாஜக., சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் கொடுத்த மனுவில், தேர்தல் பிரசாரத்தின் போது. கனிமொழி, வாக்காளர்களுக்கு ஆரத்திக்கு பணப்பட்டுவாடா செய்த ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே, வாக்குகளை விலை கொடுத்து வாங்கியதால், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக இன்று காலை தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுக., வேட்பாளருக்கு எதிராக ஒரு வழக்கு இவ்வாறு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.