பற்கள் உடைதல், பார்வை குறைபாட்டை தடுக்கும் உலர் திராட்சை….!

அடடே... அப்படியா? நலவாழ்வு பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

ULAR THERADCI 1 - 2026

உலர் திராட்சையில் ஒலினோலிக் அமிலம் உள்ளது. இதில் உள்ள பைத்தோகெமிக்கல் பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் ஏற்படுவதில் இருந்து பற்களை பாதுகாக்கும். உடையக் கூடிய பற்களையும் பாதுகாக்கும்.

அதோடு பற்கள் சிறந்த வடிவத்துடன் இருக்க வேண்டும் என்றால் அதற்கு உலர் திராட்சை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

வாயில் பேக்டீரியாக்கள் வளர்வதை உலர் திராட்சை கட்டுப்படுத்தும். இதில் உள்ள கால்சியம் பற்கள் உடைவதை தடுக்கும். வாயில் கிருமிகள் உருவாவதை குறைக்கும்.

உலர் திராட்சையில் உள்ள ஆக்ஸிடன் எதிர்ப்பான்கள் கண் பார்வைக்கு வலுசேர்க்கும். கதிர்வீச்சு காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டை உலர் திராட்சை சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

கதிர்வீச்சு தாக்குதலால் தசை வளர்தல், கேட்டராக்ட் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால் வைட்டமின் ஏ, ஏ&காரோடெனாய்டு, பேட்டாகாரோடெனி ஆகிய சத்துக்கள் அடங்கிய உலர் திராட்சை இதற்கு நிச்சயம் பலனளிக்கும்.

உடல் எடை பராமரிப்பு
மெலிந்த உடலை கொண்டு உள்ளவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் ஆரோக்கியமான வழியில் எடை அதிகரிப்பதை காணமுடியும். இதில் அதிக குளுக்கோஸ் மற்றும் ஃப்ருக்டோஸ் உள்ளது. இது உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கும். கொழுப்பு இல்லாத உடல் எடை அதிகரிப்புக்கு உலர் திராட்சை முக்கிய பங்காற்றும்.

எலும்புக்கு வலுவூட்டும்
உலர் திராட்சையில் உள்ள அதிக கால்சியம் மூட்டு வீக்கம் மற்றும் முடக்கு வாதம் ஏற்படுவதை தடுத்து எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

தோல்
தோலில் உள்ள செல்களை பாதுகாக்கும் திறன் உலர் திராட்சைகளுக்கு உண்டு. உள்புற காரணங்களால் ஏற்படும் செல்கள் அழிவை இது கட்டுப்படுத்தும். தோல் சுருக்கம், மடிப்பு, முதுமை தோற்றம் போன்றவை ஏற்படுவதை தாமதப்படுத்தும் ஆற்றல் உலர் திராட்சைக்கு உண்டு.

உடல் கழிவை வெளியேற்றும்
ரத்த நச்சு காரணமாக உடலில அசிடிட்டி உருவாகும். உலர் திராட்சையில் உள்ள பொட்டாசியம், மெ க்னீசியம் வயிற்று அமிலத்தை சீராக்கும்.

ULAR THERADCI 2 - 2026

கூந்தல்
வைட்டமின் பி, பொட்டாசியம், இரும்பு, ஆகஸிடன்ஸ் எதிர்ப்பான் போன்றவை கூந்தலுக்கு நன்மை விளைவிக்க கூடியது. இவை அனைத்தும் உலர் திராட்சையில் இடம்பெற்றுள்ளது. மேலும் கூந்தலின் தரத்தையும் உயர்த்தும். இயற்கையான நிறம் கிடைக்க உதவிகரமாக இருக்கும். இதில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. இது கூந்தலுக்கு ஊட்டமும், கனிமங்களையும் வழங்கும்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சிறிய அளவில் உள்ள உலர் திராட்சையை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிக பயனுள்ளதாக இருக்கும். அதனால் உலர் திராட்சை தினமும் சாப்பிட தவற வேண்டாம்.

ரத்த சோகைக்கு தீர்வு
இரும்பு மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்துக்களை எடுத்துக் கொண்டால் ரத்த சோகை குணமாகும். இந்த சத்துக்கள் உலர் திராட்சையில் நிறைந்து காணப்படுகிறது. ரத்ததில் சிகப்பு அணுக்களை உற்பத்தி செய்வதை இதில் உள்ள காப்பர் அதிகரிக்கும்.

புற்று நோய் அபாயம் குறையும்
உலர் திராட்சையில் கேட்சிங் என்ற ஆக்ஸிடன்ட் எதிர்ப்பான் அதிகளவில் உள்ளது. இது கதிர் வீச்சு தாக்குதலில் இருந்து உடலை காக்க கூடியதாகும். இது பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கட்டிகள் வர விடாமல் தடுக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.