திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரி தமிழ்த் துறையின் கருத்தரங்க விவகாரத்தில், அரசு தலையிடும் என்று கூறி, இது போன்ற கருத்தரங்குகள் இனி எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கல்லூரியை அரசு கேட்டுக் கொள்ளும் என்று பதிலளித்துள்ள தமிழக கலை வளர்ச்சி பண்பாட்டு அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, இந்து மக்கள் கட்சி ராம.ரவிக்குமார் உள்ளிட்ட இந்து இயக்கப் பிரமுகர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். மேலும், சமூக வலைத்தளங்களிலும் மாஃபா. பாண்டியராஜனுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
இது குறித்து ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள நன்றி அறிவிப்பில்…
Thank you very much. மிக்க நன்றி https://t.co/C2kICWxM8U
— H Raja (@HRajaBJP) November 24, 2018
– என்று கூறியுள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமாரும் அமைச்சர் பாண்டியராஜனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில்…
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் டிசம்பர் 6 7 நடைபெற இருந்த கருத்தரங்கு சம்பந்தமாக நாம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தோம். அனைவருடைய கூட்டு முயற்சியின் பலனாக இறைவன் அருளால் மாண்புமிகு தமிழக அமைச்சர் மதிப்பிற்குரிய திரு மாஃபா பாண்டியராஜன் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் தளத்தில்
“பெண்களை மகிமைப்படுத்தும் எண்ணற்ற இலக்கிய படைப்புகள் தமிழில் நிறைந்து தமிழ் பண்பாடு பெண்களை தாழ்த்தி வைத்தது என்ற நஞ்சு கருத்தினை பதிய விடக்கூடாது” என எழுதியுள்ளார் .
இதற்காக இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் . அதே நேரத்தில் அரசு நிதி உதவியோடு நடைபெறக்கூடிய இந்த திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி இது போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைக்காக ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார்கள் என்று சொன்னால் அது ஒட்டுமொத்த ஆட்சிமன்றக் குழுவின் உடைய முழு ஒப்புதலோடு வெளியிடப் பட்டதா?இல்லை… தமிழ் துறையினரால் வெளியிடப்பட்டதா? இல்லை கல்லூரி நிர்வாகத்தில் இருக்கக்கூடிய ஒருசில பாதிரிமார்களால் வெளியிடப்பட்டதா? என்பது குறித்து முழு விசாரணையை மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் மேற்கொள்ள வேண்டுகிறோம் .
அதுமட்டுமல்லாது இந்த தலைப்புகளை ஆய்வு கட்டுரைகள் ஆவணப்படுத்த முயற்சித்த குற்றத்திற்காக இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் மீதும் இந்தத் துறையின் மீதும் அதில் சம்பந்தப்பட்ட துறை பேராசிரியர்கள் மீதும் எந்தவிதமான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க போகிறது என்பது குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டுகிறோம்.
மேலும் சிறுபான்மை நிறுவனம் என்கின்ற பெயரில் பெரும்பான்மை சமூகத்தவர்கள் மதிக்கக்கூடிய இலக்கியங்கள் ,கலாச்சாரங்கள், பண்டிகைகள், சார்ந்து பலவிதமான “கருத்தியல் பயங்கரவாதம்” சிந்தனையாளர்களை அடையாளம் கண்டு தமிழக அரசு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கிட வேண்டுகிறோம்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்ட விஷயங்களையும், யாருக்கும் உதவாத கருத்துக்களையும், சமூகத்தை சீரழிக்க கூடிய கருத்துக்களையும் ஒரு ஆவணப்படுத்த முயற்சிக்கும் அயோக்கியத்தனத்தை நிறுத்துவதற்கு தமிழக அரசு ஒரு சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
மேலும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தில் இருக்கக்கூடிய தமிழ்த்துறை பேராசிரியர் செல்வகுமார் என்பவர் தந்தி தொலைக்காட்சியில் ஒரு பேட்டி அளித்திருந்தார் .
அதில் அவர் குறிப்பிடுகையில் எந்த விதமான பிரச்சினைகளும் வராது
அந்த தலைப்புகள் எல்லாம் ஒரு மாதிரி தலைப்புகள் தான் என்று குறிப்பிட்டார். தலைப்புகள் எல்லாம் மாதிரி தலைப்புகள் என்று குறிப்பிடுகிறார்! ஆனால் அவை அனைத்தும் பாதிரிகள் கொடுத்த தலைப்பு என எங்களுக்கு தோன்றுகிறது.
நவ.24 இன்று மாலை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் செல்வகுமார் பிரான்சிஸ் என்பவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் இந்தக் கருத்தரங்கு சம்பந்தமாக நிர்வாகத்தில் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறோம். தலைப்புகள் எல்லாம் தற்கால இலக்கியத்தைப் பற்றியதாக மாறும் இது சம்பந்தமாக நான் அய்யாவிடம் பேசுகிறேன் என்றும் தற்போது கஜா புயல் நிவாரணத்தில் இருக்கிறேன் என்றும் சொன்னார்.
அப்போது அவரிடம் நான் தேவையற்ற மத மோதல்களுக்கு சர்ச்சைகளுக்கு நீங்கள் ஆளாக வேண்டாம் உங்கள் கல்லூரி நிர்வாகமும் உள்ளாக வேண்டாம். திருச்சி வருகின்ற பொழுது உங்களை சந்திக்க விரும்புகிறேன் என்று சொன்னேன் .
அவரும் சந்திக்க விரும்புகிறேன் என்றார். நீங்கள் இலக்கிய செய்வதுஅழிப்பு. தவறான விஷயங்களை ஆவணப்படுத்த முயற்சி இலக்கிய கற்பழிப்பு செய்ய வேண்டாம் என சொன்னேன்.
பிறகு அழைப்பதாக சொல்லி இருக்கிறார் நான் நிச்சயமாக திருச்சி சென்று பேராசிரியர் செல்வக்குமார் பிரான்சிஸ் அவர்களிடம் தமிழ் இலக்கியங்களை காக்கக் கூடிய வகையில் இது போன்ற தலைப்புகளை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில் சந்திக்க இருக்கிறேன் என்று கூறினார் ராம.ரவிக்குமார்.