தண்டவாளத்தில் குடும்பத்தோடு செல்ஃபி! வேகத்தோடு வந்த ரயில்.. வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் பொது தகவல்கள்

train selfi - 2026

ரயில் தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுக்கும்போது திடீரென ரயில் வந்தபோதும் கடைசி வினாடியில் ஒரு குடும்பமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது.

அமெரிக்காவின் பென்சைல்வானியா பகுதியில் இருக்கும் பிராங்க்ளின் கவுண்டி என்ற இடத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்துள்ளனர்.

அப்போது பலர், தங்கள் குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்துள்ளனர்.

train selfi 1 - 2026

இதனை கண்ட அக்குடும்பத்தினர் தாங்களும் செல்பி எடுக்க ஆர்வம் கொண்டனர். இதனையடுத்து அவர்கள் செல்பி எடுத்தப்போது, அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்தது. ரயில் மிக அருகில் நெருங்கியதும் ஏதேச்சையாக ரயில் வருவதை பார்த்த ஒரு பெண் கூச்சலிடுகிறார்.

உடனே அங்கிருந்தவர்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு அங்கும் இங்கும் ஓடுகின்றனர்.

அதிஷ்டவசமாக யாரும் ரயிலில் சிக்கவில்லை. இந்த காட்சி அங்கிருந்த கேமிரா ஒன்றில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.