பயம்.. பும்ராவைப் பார்த்துதானாம்..! நியூஸி., வெட்டோரி எச்சரிக்கிறார்!

லைஃப் ஸ்டைல் விளையாட்டு

danial vettori - 2026பும்ராவின் பந்துவீச்சு அடிக்க முடியாத நிலையில் இருக்கிறது என்றும் அவர் பந்துவீச்சில் கவனமாக ஆட வேண்டும் என்று நியூசிலாந்து வீரர்களை அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி எச்சரித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில், முதலாவது அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியில் இந்திய வேகப் பந்து வீச்சாளர் பும்ரா மிரட்டுவார் என்றும் அவர் பந்துவீச்சில் கவனமாக ஆட வேண்டும் என்றும் வெட்டோரி கூறியுள்ளார்.BUMRAH - 2026

தொடக்கத்திலேயே துல்லியமாகப் பந்துவீசி, இந்திய வீரர்களின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டும்.

ரோகித், விராத் விக்கெட்டை வீழ்த்தி நெருக்கடி கொடுக்க வேண்டும். பிறகு நிலையற்ற நடுவரிசையை சாய்த்துவிடலாம்.

இந்திய அணி, ஆரம்பத்தில் மெதுவாக விளையாடுவதாகக் கூறுகிறார்கள். உண்மையிலேயே, அவர்கள் நிலைத்து நின்றுவிட்டால் கட்டுப் படுத்த முடியாத அளவுக்குச் சென்றுவிடுவார்கள்.

டிரென்ட் போல்ட்டுக்கு இந்திய அணி பற்றி நன்றாகத் தெரியும். அவர் மேஜிக்கை நிகழ்த்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார் வெட்டோரி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.