சோகத்த… ஆத்து…! இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

india team - 2026

லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த இந்திய அணியா இது என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையும் விதத்தில், அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

சிறப்பாக செயல்பட்ட போதும் வெற்றிகரமான ஃபினிஷிங் அமையாமல், 18 ரன்களில் தோல்வி அடைந்ததை இந்திய ரசிகர்கள் ஜீரணிக்க இயலாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பதிவில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில்… ஏமாற்றமான முடிவு. ஆனால் இறுதி வரை இந்திய அணியின் போராட்டத்தை பார்க்க முடிந்தது சிறப்பாக இருந்தது. உலகக் கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணியின் பேட்டிங், பீல்டிங், பவுலிங் சிறப்பாக இருந்தது. வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையில் ஓர் அங்கம். அடுத்து வரும் தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்… என்று ஆறுதல் அளித்துள்ளார்.

இதனிடையே, பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கும் இரு முறையும் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல இயலாமல் போயுள்ளது துரதிருஷ்டம் என்றும், அடுத்த உலகக் கோப்பையையாவது வெல்ல வேண்டும் என்று கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

தோனிக்கு கௌரவம் சேர்க்கும் வகையில் கோப்பையை வென்று கொடுத்திருக்கலாம் என்றும் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

1 thought on “சோகத்த… ஆத்து…! இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல்!”

  1. ஆட தெரியலைன்னா மேடை கோணல் என்ற கதை. இரு முறையும் பிரதமர் மோடி ஆட்சியில் இருந்தபோது இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது. நல்லாத்தான் ஆடினாங்க. ஆனா கொஞ்சம் அதீத நம்பிக்கையில் புள்ளிகள் கூடிவந்ததால் கண்டிப்பாக நாம் தான் ஜெயிப்போம் என்ற மமதை ஒருவேளை தலைக்குள் ஏறிவிட்டதோ என்னவோ. கடைசியில் சண்டை பக்கத்து வீட்டுக்காரனோடு என்ற கதையாக பைனல் மேட்ச் ஆஸ்திரேலியா மற்றும் நியூ ஸிலண்ட் இடையில் தான் இருக்கும் என்றே தோன்றுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.