டெமாக்ரஸி… இதை டெமா க்ரேஸி என்று சிலர் சொல்வார்கள். அதாவது ஜனநாயகம் என்ற வார்த்தைக்கு ஒவ்வொருவரும் ஒரு பொருளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த டெமாக்ரஸியை ஒரு பாடு படுத்தியிருக்கிறார் நம் தமிழகத்தில் டெமாக்ரஸி என்ற ஜனநாயகத்துக்கு எடுத்துக் காட்டாக, திமுக., கூட்டணி வேட்பாளர்களே ஒட்டுமொத்தமாக வென்ற போது, தேனியில் மட்டும் அதிமுக., சார்பில் போட்டியிட்டு வென்ற ஓபி ரவீந்திரநாத் குமார்.

Democracy என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அண்மைய மத்திய பட்ஜெட்டை பொருத்தி, புது விளக்கம் கொடுத்த ரவீந்திரநாத் குமார் ஒட்டுமொத்தமாக மக்களவை உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தார் என்றே சொல்லலாம்.

மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக அமைந்த பின்னர், நடப்பு நிதியாண்டுக்கான (2019-2020) முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 5 ஆம் தேதி தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் திங்கட்கிழமை தொடங்கி, மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய பட்ஜெட்டால் ஏழைகளுக்கு பயனில்லை என்று வழக்கம் போல் ஒப்பாரி வைத்தனர்.

இந்நிலையில் தேனி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் பட்ஜெட் குறித்து தனது கருத்தை முன்வைத்த போது, கொஞ்சம் புகுந்து விளையாடினார். ‘Democracy’ (ஜனநாயகம்) என்ற ஆங்கிலச் சொல்லில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் பிரித்து மேய்ந்து, ஒரு விளக்கத்தைச் சொல்லி, நம் தமிழகத்தின் புகழ்ந்துரைக்கும் பாணியில் சொல்லி முடித்த போது… உறுப்பினர்களுக்கு அவ்வளவு உற்சாகம்! கைத்தட்டல் ஆரவாரம் எல்லாம்தான்!

ஓ.பி.ரவீந்திரநாத் சொன்ன எழுத்துப் பிரித்து மேய்தல் இது…

D for Development Budget – வளர்ச்சிகான பட்ஜெட்
E for Enormous Budget – அருமையான பட்ஜெட்
M for Modernisation Budget – நவீன பட்ஜெட்
O for Organized Budget – ஒருங்கிணைந்த பட்ஜெட்
C for Corruption free Budget – ஊழலற்ற பட்ஜெட்
R for Revolutionary Budget – புரட்சிகரமான பட்ஜெட்
A for Associated Budget – மக்களோடு தொடர்புடைய பட்ஜெட்
C for Cultural Budget and – கலாசார பட்ஜெட்
Y for Young Budget – இளம் தலைமுறைகளுக்கான பட்ஜெட்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...