ரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்?!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா தமிழகம் லைஃப் ஸ்டைல்
RAGAVA L 2 - 2026

அனைவருக்கும் வணக்கம்!

எனக்கு அரசியல் தெரியாது! ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப பற்றி
எனக்கு மிக நன்றாகவே தெரியும்!
திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை, யார் மனதையும் நோகும் படி
பேசக்கூடியவர் அல்ல! ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர்!

எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ
அவதூறாக பேசக்கூடியவர் அல்ல! ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டதாக
கூறுகின்றனர்

அப்படி பேசக்கூடியவர் என்றால் 2006 ஆம் ஆண்டு பெரியாரின் தீவிரத் தொண்டரான
இயக்குநர் திரு வேலு பிரபாகரன் அவர்கள், “பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது”
திரு வேலுபிரபாகரனே எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து, அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்?

பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் திரு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்கள், எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!
அன்புடன்….
“ராகவா லாரன்ஸ்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.