தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயிலில் திருவாவடுதுறை குரு மகாசந்நிதானம் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார்.
தஞ்சை மாவட்டம் சூரியனார் கோவில் பிரசித்தி பெற்ற சூரியனார் கோவில் உள்ளது இக்கோவிலில் மூலவர் சிவசூரியன் அருள்பாலிக்கிறார். இங்கே சூரியபகவான் இரு தேவியருடன் அருள்பாலிக்கிறார். நவக்கிரக தலங்களில் சூரியன் முதன்மையாக இருப்பதால் இக்கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கிறார்கள்.
ஏழரைச் சனி அஷ்டமத்துச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலாகும். நவக்கிரக கோவில்களில் இக்கோவில் மிகவும் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் திருவாவடுதுறை 24ஆவது மகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவிலில் வழிபாடு செய்து வருடந் தோறும் கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி புத்தாடையை வழங்கி அருளாசி வழங்கினார்.