நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா – ரசிகர்கள் அதிர்ச்சி

சினி நியூஸ் சினிமா
f4480799346ede7530d84d94b4747215 - 2026

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையிலும், பிரபலங்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தெலுங்கு ந்டிகர் சிரஞ்சீவி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆச்சர்யா என்கிற புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். எனவே, படப்பிடிப்பிற்கு செல்லும் முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அப்போது, அவருக்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

எனவே, வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிரஞ்சீவி ‘கடந்த 5 நாட்களாக என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நான்  குணமடைந்த பின் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்

 
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.