செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் நினைவு தினம் அனுசரிப்பு!

சற்றுமுன் நெல்லை

senthurpandian memory - 2026

நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இந்து சமய அறநிலைய துறை முன்னாள் அமைச்சர் அமரர் செந்தூர் பாண்டியனின் நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது.

அமைச்சர் செந்தூர் பாண்டியனின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் உள்ள திருஉருவப்படத்திற்கு மூத்த மகன் ஐயப்பராஜா, இளைய மகனும் அதிமுக நகரச் செயலாளருமான குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி மற்றும் குடும்பத்தினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அவரது திருஉருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.