கிரீஸ்ஸில் புயல் ! கடும் சேதம் !

உலகம் சற்றுமுன் பொது தகவல்கள்

kirish - 2026கிரீஸ் நாட்டில் வீசிய புயல் அந்நாட்டின் சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வடக்குப் பகுதியில் உள்ள வெர்ஜியா, ஹல்கிகிடி தீபகற்பம், தீசலோனிகி உள்ளிட்ட இடங்களில் வீசிய புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றினால் வீடுகளின் கூரைகள் பறந்தன. சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறு கடைகள் முற்றிலும் சேதமடைந்தன.

புயலால் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சேதமடைந்தன. புயலைத் தொடர்ந்து ஹல்கிடிகி பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.புயல் மற்றும் மழைக்கு 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 23 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.