குர்ஆன் விநியோக ‘ப்ளாக்மெயில்’ செய்த நீதிபதிக்கு புறக்கணிப்பு: ராஞ்சி பார் அசோஷியேன்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

lawyers in ranchi court - 2026

ராஞ்சி பார் அசோஷியேன் இன்று ஒரு அதிரடி முடிவை அறிவித்து பல தரப்பிடம் இருந்தும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

ரிச்சா பாரதி என்ற 19 வயது கல்லூரிப் பெண் சில நாட்களுக்கு முன் தனது பேஸ்புக் பதிவில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். அண்மையில் இறந்த தப்ரீஸ் மகன், தன் தந்தைக்கு ஏற்பட்ட நிலைக்காக ஆயுதம் ஏந்தினால் என்ன செய்வது? என்று கேட்கப்பட்ட ஒரு பதிவுக்கு, காஷ்மீர் பண்டிட்டுகள் குடும்பத்திலிருந்து யாரும் அப்படி உருவாகவில்லையே! என்று அவர் பதில் பதிவு செய்திருந்தார்.

இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்காக, இரு சமூகங்களுக்கு இடையில் விரோதத்தைத் தூண்டும் வகையில் கருத்தைப் பதிவு செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.

richa bharti1 - 2026இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் கைது செய்யப் பட்டார். அதில் அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, ராஞ்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கிலிருந்து ஜாமீன் பெற வேண்டுமானால், ரிச்சி பாரதி 5 குர்ஆன் நூல்களை வாங்கி, விநியோகிக்க வேண்டும் என்று ராஞ்சி நீதிமன்றத்தில் நீதிபதி மனீஷ் குமார் சிங் தீர்ப்பு வழங்கினார்.

ஆனால், இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த ரிச்சா பாரதி, முதலில் குர்ஆன் புத்தகம் வழங்கச் சொல்வீர்கள், பிறகு மண்டியிடச் சொல்வீர்கள், பின்னர் இஸ்லாமாக மாறு என்பீர்கள்… இதெல்லாம் சரிப்படாது என்று கூறி மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பும், அவரது பதிலும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்து இயக்கங்கள் இந்தத் தீர்ப்பு குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டு வந்தன. போராட்டங்களும் நடந்தன.

இந்நிலையில், ரிச்சா பாரதிக்கு ஆதரவு அளித்துள்ள ராஞ்சி நீதிமன்ற வழக்குரைஞர்கள், ஒருமனதாக ஒரு முடிவை எடுத்தனர். அதன்படி, சம்பந்தப்பட்ட நீதிபதி முன் எந்த வழக்கையும் கையில் எடுத்து வாதாடப் போவதில்லை என்றும், தாங்கள் இந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப் படும் வரையில் நீதிமன்றத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளனர். அதே நேரம் இது தொடர்பாக அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாக வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.