நிபாவை ஓட,ஓட விரட்டிய கேரளா; நலமுடன் வீட்டுக்கு வந்த இளைஞர்……..!

அடடே... அப்படியா? இந்தியா நலவாழ்வு பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

NEBA DEEM - 2026

நிபா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் கேரள மாநில அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

நிபா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் தற்போது நலமடைந்து வீடு திரும்பி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு மீண்டும் கடந்த மாதம் தொடக்கத்தில் பதிவானது.

நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இளைஞர் எர்ணாகுளம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து இளைஞருடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ பணியாளர்கள் என 316 பேர் தொடர் கண்காணிப்பி இருந்தனர்.

ஆனால் யாருக்கும் பாதிப்பு இல்லையென தெரியவந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கேரள அரசின் தொடர் சிகிச்சை முயற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது.

இளைஞர் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

“இளைஞர் இப்போது இயல்பாகவும், நலமாகவும் உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அவரை நேரில் பார்த்தேன்,” என மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் என்.கே. குட்டப்பன் கூறியுள்ளார்.

2018-ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு தெரியவந்தது.

அப்போது நிபா வைரஸ் காய்ச்சலால் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து கேரள அரசு அதிதீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் மூலம் நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து பாராட்டு பெற்றது. மீண்டும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியபட வைத்துள்ளது. மேலும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நோய் தாக்கப்பட்ட இளைஞருக்கு  சிகிச்சை அளித்த கேரள அரசை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.