ஜெகன் மோகனை சந்தித்த ஹிந்து என் ராம்!

இந்தியா சற்றுமுன்

IMG 20190724 WA0020 - 2026

ஒய் எஸ் ஜெகனோடு ஹிந்து குரூப் சேர்மன் என்.ராம் சந்திப்பு …

அமராவதி:- ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியை த ஹிந்து குரூப் சேர்மன் என். ராம் சந்தித்து பேசினார்.

செவ்வாய்க்கிழமை அன்று ஜகனுடைய வீட்டிற்கு வந்த ராம் முதல்வராக ஜெகன் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் மாநில அரசு எடுத்துவரும் திட்டங்களான அம்மா மடி, விவசாய பரோசா திட்டம் போன்ற நலன் திட்டங்கள் பற்றி முதல்வர் ஜெகன், ராமிடம் விவரித்தார்.

அதேபோல் அரசாங்க பள்ளிகள் மருத்துவமனைகள் போன்றவற்றில் செய்து வரும் வளர்ச்சி நலன் பற்றிய செயல் திட்டங்களையும் எடுத்துக் கூறினார்.

என் ராம் பேசுகையில் அம்மா மடி திட்டம் தன்னை மிகவும் ஈர்த்து உள்ளதாக ஜெகனிடம் தெரிவித்தார்.

மறைந்த முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியுடன் தனக்கு இருந்த நெருக்கமான நட்பு பற்றி ராம் நினைவுகூர்ந்தார்.

பின் ஜகனுக்கு ஒரு நினைவுப் பரிசு அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.