பயங்கரவாத தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது
நாடாளுமன்ற மக்களவையில் பயங்கரவாத தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பயங்கரவாதத்தை தடுக்க கடுமையான சட்டங்கள் அவசியம் என்றார்.
மேலும் ”பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள், நிதி அளிப்பவர்களையும்ப கருத வேண்டும். பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம். அதேநேரத்தில் இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படாது,” என்று உறுதி அளித்தார்.
கூட்டாட்சிஅமைப்பை மத்திய அரசு அழிப்பதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறிய குற்றச்சாட்டை மறுத்த அமித்ஷா சித்தாந்தம் என்ற பெயரில் நகர்ப்புற மவோயிசத்தை ஊக்குவிக்கும் சிலர் மீது மத்திய அரசுக்கு எந்த அனுதாபமும் இல்லை என்றும் உறுதிபடக் கூறினார்.
அசாதுதின் ஓவைசி வலியுறுத்தலின் பேரில் நடைபெற்ற பகுதிவாரியான வாக்கெடுப்பில் 287 எம்பிக்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஓவைசி உள்ளிட்ட 8 எம்பிக்கள் மட்டும் எதிராக வாக்களித்தனர்.
இந்த சட்டத்தை, காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், திரிணாமுல் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளும் ஆதரித்தன.