இஸ்ரேலில் தேர்தல் பிரசாரத்துக்கு ‘உதவும்’ மோடி! கலக்கும் பிரமாண்ட பேனர்கள்!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modi netanyahu - 2026

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பாரதப் பிரதமர் மோடி கைகுலுக்கிய படி இருக்கும் மிகப்பெரிய ‘பேனர்’ இஸ்ரேலில் தேர்தல் விளம்பரமாக வைக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இஸ்ரேலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் செப்.17 ஆம் தேதி மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. மீண்டும் தாம் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் பிரசாரத்தில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு.

தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி, உலக அளவில் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்ந்திருக்கிறார். அரபு நாடுகளிலும் பாரதப் பிரதமருக்கு மரியாதை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், தனது தேர்தல் விளம்பரத்தில் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரதப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் ஆகியோருடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு கைகுலுக்கி நட்பு பாராட்டும் பெரிய அளவு பேனர்கள் நகரில் வைக்கப் பட்டுள்ளன.

உலக தலைவர்களுடன் இஸ்ரேல் பிரதமர் நட்புடன் திகழும் வகையில், அவர்களை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள இந்த விளம்பரங்கள் இஸ்ரேலில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தப் படங்களை இஸ்ரேலி பப்ளிக் ப்ராட்காஸ்டிங் கார்பரேஷனைச் சேர்ந்த தொடர்பாளர் அமிச்சாய் ஸ்டீன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது டிவிட்டர் பதிவுக்கு இந்தியாவில் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியர்கள் பலர் இஸ்ரேலுடன் திகழும் நட்புறவை வரவேற்று பெருவாரியாக கருத்துகளைப் பதிந்துள்ளனர். இந்த டிவிட்டர் பதிவு இப்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.