டிசம்பர் 18,19 வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு திருப்பதி மலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 18 ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
அடுத்த மாதம் 18 ஆம் தேதி வைணவ சம்பிரதாயத்தைக் கடைபிடிக்கும் பக்தர்களுக்கு முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி திருநாள் வருகிறது. வைகுண்ட ஏகாதசி நாளன்று திருப்பதி ஏழுமலையானை தரிசித்து கோவிலில் உள்ள சொர்க்கவாசல் பிரவேசம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மலைக்கு வருகின்றனர். இந்த ஆண்டும் அதே போல் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று தேவஸ்தான நிர்வாகம் எதிர்பார்க்கிறது.