பேரூந்திலிருந்து கழன்று விழுந்த சைலன்சர் ! இறக்கிவிடப்பட்ட பயணிகள் !

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள்

bus 1 - 2026சென்னை அருகில் கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் சென்று கொண்டு இருந்திருக்கிறது. அதில் வழக்கம்போல் பயணிகள் அதிகமாக நிரம்பி வழிந்துள்ளனர்.

பஸ் நடுரோட்டில் செல்லும்போது, அதன் சைலன்ஸர் நடுவழியில் கழண்டு விழுந்து விட்டது. இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் பதறி பயந்து உள்ளனர்.

உடனே டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டார். இதனால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இந்த காட்சியை அந்த வழியாக ஆட்டோவில் செல்லும் ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.

அதில் பேசுபவர் சொல்கிறார், “பார்த்தீங்களா.. இதுதான் நம்ம அரசு பஸ்ஸோட நிலைமை.. . இங்க பாருங்க.. விழுந்து கிடந்த சைலன்சரை டிரைவரும், கண்டக்டரும் தூக்கி வச்சிட்டு நின்னுட்டு இருக்காங்க. பாசன்ஞர் எல்லாம் இறங்கிட்டாங்க.. பின்னாடி எவ்ளோ டிராபிக் ஜாம் பாருங்க” என்று புலம்பியவாறே ஆட்டோவில் செல்கிறார்.இந்த வீடியோ இப்ப வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.