
திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் வெங்காயத்தின் விலையை விட கத்தரிக்காயின் விலை மிகவும் அதிகரித்தது. இதனால் சில்லரை விற்பனை கடைகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.125-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினா்.
இந்தியா முழுவதும் தேவைக்கு ஏற்ப வெங்காய உற்பத்தி மற்றும் விநியோகம் இல்லாததால் நாடு முழுவதும் கடந்த வாரத்தில் வெங்காயத்தின்விலை பன்மடங்கு உயா்ந்தது.
சின்னவெங்காயத்தின் விலையும் வரத்து குறைவால் உயா்ந்தது. இதையடுத்து வெங்காய இறக்குமதிக்கான சில விதிவிலக்குகளை மத்திய அரசு தளா்த்தியுள்ள நிலையில் இந்த வாரத்தில் விலை சற்று குறைந்துள்ளது.

திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் ஒரு கிலோ பல்லாரி ரூ.70-க்கும், சின்னவெங்காயம் ரூ.80-க்கும் விற்பனையானது. ஆனால், கத்தரிக்காயின் விலை வெங்காயத்தைக்காட்டிலும் மிகவும் அதிகரித்துள்ளது.
போதிய மழையின்மையால் கத்தரிக்காய் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் காய்கனி சந்தைகளில் முதல்தர கத்தரிக்காய் கிலோ ரூ.110-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.125-க்கும் ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் காய்கனிகளின் விலைநிலவரம் (கிலோவுக்கு):
கத்தரி -ரூ.110,
வெண்டைக்காய் -ரூ.30,
தக்காளி -ரூ.28,
அவரை -ரூ.65,
கொத்தவரை -ரூ.35,
புடலங்காய் -ரூ.35,
பாகற்காய் -ரூ.40,
தடியங்காய் -ரூ.14,
பூசணிக்காய் -ரூ16,
மாங்காய் -ரூ.55,
மிளகாய் -ரூ34,
வாழைக்காய் -ரூ35,
தேங்காய் -ரூ.36,
முள்ளங்கி -ரூ.16,
பல்லாரி -ரூ.70,
சின்னவெங்காயம் -ரூ.80,
சேனைக்கிழங்கு -ரூ.34,
கருணைக்கிழங்கு -ரூ.48,
சேம்பு -ரூ.34,
கொத்தமல்லி கீரை -ரூ.100,
புதினா -ரூ.60,
உருளைக்கிழங்கு -ரூ.24,
கேரட் -ரூ.62,
பீட்ரூட் -ரூ.30,
எலுமிச்சை -ரூ.45,
நார்த்தை -ரூ.30,
வாழைப்பழம் -ரூ.70,
நெல்லிக்காய் – ரூ.30,
இஞ்சி -ரூ.180.