
அமெரிக்கா சென்றுள்ள தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் என்ற விருது வழங்கப்பட்டது.
தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் அரசு முறைப் பயணமாக நேற்று முன் தினம் சிகாகோ புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி மற்றும் மகனும், எம்.பி.யுமான ரவீந்திர நாத் குமாரும் சென்றுள்ளனர். சிகாகோ விமான நிலையத்தில் இன்று அதிகாலை சென்றடைந்த பன்னீர் செல்வத்துக்கு தமிழ்ச் சங்கத்தினர் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிகாகோ ஓக் புரூக் டெரேஸில் , 10 வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழாவில் சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பாக தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது Congressman திரு.ராஜா கிருஷ்ணமூர்த்தி, Schaumburg மேயர் திரு.டாம் டெய்லி, Oakbrook மேயர் திரு கோபால் ஆல் மலானி ,தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.ரவீந்திரநாத் குமார், தமிழ்நாடு வீட்டுவசதி துறை அரசு செயலர் திரு.ச. கிருஷ்ணன்,இ.ஆ.ப., உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர் மற்றும் தமிழ் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.