உளவுத்துறை எச்சரிக்கை! தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டம்!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள்
thiviravathi - 2026

பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு, இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்தகவல்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அயோத்தியில் சர்ச்சைக்குள்ளான நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக, கடந்த 10 நாட்களாகவே நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்த, திட்டமிட்டுள்ளதாக உளவுத் தகவல்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தீவிரவாதிகளின் சதித் திட்டம் குறித்து உளவுத்துறை, ரா (RAW) உள்ளிட்டவை அரசுக்கு தகவல் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.