சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா; மாநிலங்களவையில் நிறைவேற்றம்…!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள்

 

Amethsha - 2026

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தண்டனையை வலுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது.

இதனையடுத்து இந்த சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 147 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் விழுந்தன.

இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை பயங்கரவாதி என அறிவித்து அவர்கள் மீது கடும் தண்டைனை வழங்க வழி வகுக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.