போராட்டத்தின் போது… தொடக்கூடாத இடத்தில் தொட்டு இளம்பெண்ணை சீண்டிய போலீஸ் கான்ஸ்டபிள்!

Published:

hyderabad police2 - 2026மருத்துவக் கல்லூரி மாணவியை கிள்ளிய போலீஸ் கான்ஸ்டபிளின் செயலை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ஹைதராபாத் வாசிகள் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். சமூக வலைத்தளங்களில் இது குறித்த பதிவுகள் அதிகம் பரவின.

கான்ஸ்டபிள் பரமேஷ் என்பவர் மருத்துவக் கல்லூரி மாணவியை தகாத முறையில் கிள்ளியதால் போராட்டம் இன்னும் தீவிரமடைந்தது.  ஹைதராபாத் நகரின் சார்மினார் அருகில் மாணவிகள் தாரணாவில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத் அரசு ஆயுர்வேத மருத்துவமனையை “எர்ரகட்டா”வுக்கு மாற்றியதை எதிர்த்து சார்மினார் அருகே புதன்கிழமை (ஜூலை 31) மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

hyderabad police3 - 2026சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைபட்டது. அதனால் காவல்துறையினர் மாணவ மாணவிகளை விரட்ட முயன்றனர்.

அந்த சந்தர்ப்பத்தில் மாணவ மாணவியருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கலைத்துவிட்ட போலீஸார், பின்னர் அவர்களில் சிலரை காவல்துறை வாகனத்தில் ஏற்றும்போது ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் அசிங்கமாக நடந்து கொண்டார்.

பாதிக்கப்பட்ட பெண் என்னைத் தொடாதே என்று கத்தினாள். முதலில் சற்று பின் வாங்கிய காஸ்டபுள் மீண்டும் முன்னால் வந்து மாணவியை வேண்டுமென்றே அசிங்கமாக கிள்ளினார். அதனை வீடியோவில் பார்த்தால் புரிகிறது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

hyderabad police1 - 2026ஹைதராபாத் சார்மினார் அருகே அரசு ஆயுர்வேத கல்லூரி மாணவ மாணவிகளில் அதிகமாக மாணவிகளே போராட்டத்தில் இருந்தனர். ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தகாத முறையில் நடந்து கொண்டு தார்ணாவில் பங்குகொண்ட மாணவியை கிள்ளி விட்டு வேடிக்கை பார்த்தார். மாணவிகளின் போராட்டம் தீவிரமடைந்தது.

போராட்டத்தில் பங்கு கொண்ட ஒரு மாணவியிடம் மஃடியில் இருந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் அசிங்கமாக நடந்து கொண்டார். மாணவியை காலால் மிதித்து கைவிரல் நகத்தால் கிள்ளி மகிழ்ந்தார்.

hyderabad police4 - 2026அங்கிருந்த சிலர் அந்த காட்சிகளை தம் செல்போன்களை வீடியோ எடுத்தனர். அங்கு பெண் காவல் அதிகாரிகள் இருந்த போதிலும் வேண்டும் என்றே அவர் அவ்வாறு நடந்து கொண்டது வீடியோ பதிவு மூலம் வெளி வந்தது. போலீஸ் கான்ஸ்டபிள் நடத்தை குறித்து மகளிர் சங்கங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

hyderabad police5 - 2026அமைதியாக தர்ணா செய்து வந்த மாணவியிடம் அசிங்கமாக நடந்து கொண்டவர் மேல் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனே பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

அதன் தொடர்பாக போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் அந்த கான்ஸ்டபிளை சஸ்பெண்ட் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img