December 6, 2025, 11:30 AM
26.8 C
Chennai

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க புதிய வடிவில் ஆரோக்கிய சந்தேஷ் அறிமுகம்!

sandesh

கொரோனா தொற்றுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இயற்கையான தேனில் தயாரான ‘ஆரோக்ய சந்தேஷை’ சந்தைப்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது

வட இந்தியாவில் சந்தேஷ் மிகவும் பிரபலமான இனிப்பு. இந்த இனிப்பை செய்வது மிகவும் எளிமையானது.

தேவையான பொருட்கள் :

முழு க்ரீம் உள்ள பால் – 1 லிட்டர்
எலுமிச்சைப் பழச்சாறு – 1 டேபிள்ஸ்பூன்,
தூளாக்கிய சர்க்கரை – 1/8 கப்,
பிஸ்தா, பாதாம் – 2 டேபிள்ஸ்பூன்,
குங்குமப்பூ – சிறிதளவு.

செய்முறை:
பாலை கொதிக்க வைத்து அதில் எலுமிச்சைச்சாறை கலக்கவும். பால் திரித்து தண்ணீர் தனியே நிற்கும். அடிப்பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறவும். தண்ணீர் பிரிந்து தனியே வரும் வரை கிளறவும். இந்தப் பன்னீரை மஸ்லீன் துணியில் கட்டி 30 நிமிடங்கள் தொங்கவிடவும்.

அப்போது மீதமுள்ள தண்ணீரும் வெளியேறி விடும். இந்த பன்னீரை எடுத்து எலுமிச்சையின் புளிப்பு தன்மை போகும் வரை தண்ணீரில் சுத்தம் செய்யவும். தண்ணீர் இருந்தால் பிழிந்து எடுத்து விடவும். பிறகு பன்னீருடன் தூளாக்கிய சர்க்கரை சேர்த்து மிருதுவான விழுதாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு நான்ஸ்டிக் தவாவில் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

முதலில் விரல்களில் ஒட்டிக் கொண்டு வரும். பிறகு ஒட்டாததாக மாறிவிடும். ஒட்டாத பதத்துக்கு வந்ததும் குங்குமப்பூ சேர்த்து கலந்து வைக்கவும். இந்த குங்குமப்பூ ஒட்டாத பதத்துக்கு வந்ததும் அதன் நிறம் மாறும். பிறகு இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

இது மிதமான சூட்டில் இருக்கும் போது தட்டையாக கைகளால் தட்டி, மேலே பிஸ்தா, பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்

இவ்வாறு தயாரிக்கப்படும் சந்தேஷ் இனி ஆரோக்கியம் தரும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் துளசி தேன் சேர்த்து தயாரிக்கப்பட உள்ளது

பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் பாலாடை கட்டியை, சுந்தர்பன் காடுகளில் இருந்து தருவிக்கப்படும் சுத்தமான தேனுடன் கலந்து ஆரோக்கிய சந்தேஷ் தயாரிக்கப்படவுள்ளது.

இதனுடன் துளசி இலைகளின் சாறும் சேர்க்கப்படுமென மேற்கு வங்க கால்நடை வள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் எந்தவித செயற்கையான பொருட்களும் சேர்க்கப்படாமல் தயாராகும் இனிப்பு பண்டத்தை நகரங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களின் விற்பனை நிலையங்களில் கிடைக்குமெனவும், சந்தேஷ் ஒட்டுமொத்தமாக உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஆனால் இது கொரோனா தொற்றுக்கு மாற்று மருந்து அல்ல.சந்தேஷ் இன்னும் இரண்டு மாதங்களில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சாதாரண மக்களும் வாங்க கூடியதாக இருக்குமென அவர் கூறினார்.

அமைச்சர் மந்துராம் பக்கிரா கூறுகையில், ‘ஆரோக்ய சந்தேஷை’ தயாரிப்பதற்கான தேன், பிர்காலி, ஜார்காலி மற்றும் சுந்தர்பன்ஸின் பிற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும். அது அறிவியல் முறையில் சேமிக்கப்படும்’ என்றார்.

இம்மாத துவக்கத்தில் கோல்கட்டாவை சேர்ந்த பிரபல ஸ்வீட் தயாரிப்பு நிறுவனம், ‘இம்யூனிட்டி சந்தேஷ்’ என்ற இனிப்பு பண்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மஞ்சள், துளசி, குங்குமப்பூ, மற்றும் ஏலக்காய் மற்றும் இமயமலை தேன் போன்ற பல்வேறு மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தது. இது கொரோனாவை எதிர்த்து போராட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories