தமிழக சட்டமன்றத்தில் தளி தொகுதியின் உறுப்பினராக இருந்த கே.வி.முரளிதரன் காலமானார்.
இவர் 2001ல் தளி தொகுதியில் இருந்து பாஜக., சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்டார். த.மா.காங்கிரஸில் இருந்து பாஜக.,வுக்கு வந்தவர்.
கடந்த 2001 தேர்தலில் பாஜக.,சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களான 4 பேரில் இவரும் ஒருவர். இவரது மறைவுக்கு அப்போது சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இவருடன் சட்டப் பேரவையில் இருந்த பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா தனது அஞ்சலியை பதிவு செய்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில்…
என்னுடன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தளி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.வி.முரளிதரன் காலமானார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அன்னாரது ஆன்மா நற்கதியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் pic.twitter.com/Hy6AIApSkU
— H Raja (@HRajaBJP) August 11, 2019