பாலியல் புகாரை வாங்க மறுத்த போலீஸார்; பெண் சாலைமறியல்!

Published:

avaniapuram-lady-protest1
avaniapuram-lady-protest1

மதுரை அருகே அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸாரை கண்டித்து பெண் உள்ளிட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும், போலீஸார் அந்த பெண்ணை அகற்ற முயற்சித்தும், போராட்டத்தை கைவிடவில்லை.

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்த பெண் பாலியல் புகாரை அளித்தும், அவனியாபுரம் போலீசார் வாங்க மறுத்தனர். எனவே மதுரை விமான நிலைய சாலையில் புகார் அளிக்க வந்த பெண் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் அழகு வள்ளி (வயது 35) இவருக்கு இவரது உறவினர்களே பாலியல் தொல்லை தருவதாக புகார் தெரிவித்தார்.

தொடர்ந்து அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு இது தொடர்பில் புகார் கொடுக்கச் சென்ற போது அங்கிருந்த போலீசார் புகாரை வாங்க மறுத்து அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அழகு வள்ளி வில்லாபுரம் – விமான நிலைய மெயின் ரோட்டில் எம்.எம்.சி. காலனி. அருகே சுமார் அரைமணி நேரம் நடுரோட்டில் மறியல் செய்தனர்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!
avaniapuram-lady-protest2
avaniapuram-lady-protest2

இது குறித்து தகவலறிந்து வந்த அவனியாபுரம்
போலீசார் அங்கு வந்து சாலை மறியல் செய்தார். போலீஸார் அழகு வள்ளியை குண்டு கட்டாக தூக்க முயன்ற போது போலீசாருக்கும் அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கும் மோதல் ஏற்பட்து. பின்னர் அவனியாபுரம் போலீசார் அழகு வள்ளி உள்ளிட்ட 8 பேரை வேனில் ஏற்றிச் சென்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img