இன்று… சிவபிரதோஷம்!

ஆன்மிகச் செய்திகள் கவிதைகள்

sivan - 2026

சிவபிரதோஷம் : “சிவகுடும்பம்“

கவிதை: மீ.விசுவநாதன்

வழிவிடு தெய்வம் இவரென்று – தினம்
வழிபடு கின்றோம் சிவரூபம்
விழிவழி உள்ளே இவர்சென்று – நம்
வினைகளைத் தீர்ப்பார் அதுஉண்மை.

வழிவழி யாக சிவநாமம் – நம்
வாக்கிலே நின்று நமைக்காக்கும்
அழிவது தீய குணமென்று – மட
அறிவினை மாற்றும் சிவஞானம்.

அளவது வான சிவகுடும்பம் – அதன்
அருமையே அன்பின் அருள்வடிவம்
உளமதில் கொண்டோர் உலகத்தில் – ஓர்
உரசலு மின்றி நிலைப்பார்கள்

(இன்று (12.08.2019) பிரதோஷம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.