குரு பெயர்ச்சி பலன்கள் (2021-22): மிதுனம்

Published:

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
20.11.2021 முதல் 13.04.2022 வரை

நிகழும் ப்லவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை இரவு 43:11:26 நாழிகைக்கு ஆங்கில வருடம் 2021, நவம்பர் மாதம், 20ம் தேதி இரவு 11:30:28 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது திருக்கணிதம் லஹரி அயனாம்ஸப்படி. கும்ப ராசியில் அவர் 13.04.2022 பிற்பகல் 03.49.47 மணி வரை சஞ்சரிக்கிறார். அதன் பின் மீன ராசியில் சஞ்சாரம்.

வாக்கிய பஞ்சாங்கம் படி 13.11.2021 ஐப்பசி மாதம் 27ம் தேதி இரவு 08.46 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார்.

அடியேன் எப்பொழுதும் லஹரி அயனாம்ஸப்படி செல்வதால் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் 20.11.2021 முதல் 13.04.2022 வரைக்குமான பலன்களை கணித்து இருக்கிறேன்.

வெறும் 144 நாட்கள் மட்டுமே கும்பத்தில் குரு சஞ்சாரம் ஏற்கனவே 06.04.2021 முதல் 14.09.2021 வரை கும்ப ராசியில் சஞ்சரித்த பலன்கள் போன குருபெயர்ச்சியில் தெரிவித்து இருந்தோம். இனி மேற்படி 144 நாட்களுக்கான பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ளலாம்.

gurupeyarchi2021 2022
gurupeyarchi2021 2022

குறிப்பு 1: இந்த 144 நாட்களுக்குள் மற்ற சூரியன், செவ்வாய், புதன் சுக்ரன் ராகு கேது இவர்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட்ட பலன்கள்

குறிப்பு 2 : இவை பொதுப்பலன்கள். இதைக் கொண்டு தீர்மானிப்பது அவ்வளவு சரியாக இருக்காது.  ஒவ்வொருவரும் அவருடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன்கள் கேட்டுப் பெறுவது சிறந்த ஒன்று. மேலும் லக்னத்தை ஒட்டியும் பலன் சொல்லி இருப்பதால் உங்கள் லக்னம் தெரிந்தால் அதையும் சேர்த்து பார்த்துக் கொள்வது நல்லது.!

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

குருபெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1-304, D1 Block, சித்தார்த் பௌண்டேஷன்
ஐய்யஞ்சேரி மெயின்ரோடு, ஊரப்பாக்கம் – 603210
மொபைல்(வாட்ஸப்) 8056207965,
லேண்ட்லைன் : 044-35584922
Email ID : mannargudirs1960@hotmail.com


3 mithunam

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை 4 பாதம், புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய


உங்கள் ராசிக்கு குருபகவான் ஒன்பதில் பெயர்ச்சியாகிறார் இவர் 144 நாட்கள் வரை கும்ப ராசியில் இருக்கிறார் ஒன்பதாம் இடம் என்பது பாக்கியஸ்தானம் அங்கு குரு அமர்ந்து ராசியைப் பார்ப்பது கடந்த கால கஷ்டங்களை தீர்க்கும் விதமாக அமைகிறது தடைபட்டு வந்த முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும் காலம் இது

வெற்றியைத் தேடித் தரும் பெயர்ச்சியாக அமைகிறது. கூடவே 17 3 2022 அன்று ராகு பகவான் 11-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார் அதுவும் நன்மையை தருகிறது அதனால் இதுவரை போட்ட திட்டங்கள் இனி நிறைவேறும் பொருளாதார ஏற்றம் பெறும் சிலருக்கு சொந்த தொழில் அமையும்

யோகம் உள்ளது வெளிநாடு உத்தியோகம் அவர்களுக்கு கைகூடிவரும் விரும்பிய இடமாற்றம் தொழில் மாற்றம் இவை நன்கு நடக்கும் அதனால் பொருளாதாரம் ஏற்றம் பெறும் பொதுவில் இந்த பெயர்ச்சி உத்தியோகஸ்தர்களுக்கும் சொத்த தொழில் செய்பவர் என அனைவருக்கும் வருமானத்தை பெருக்குவதாக அமைகிறது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

இல்லத்தில் சுப நிகழ்வுகள் மூலம் சுப விரயம் உண்டாகும் இறைவன் அருள் நிறைந்து இருக்கும் பழைய விரோதிகள் அவர்கள் உங்களுக்கு நன்மை செய்வதாக செய்கிறவர்களாக மாறுவார்கள் உறவுகள் நட்புகள் தருவார்கள் பொருளாதார முன்னேற்றம் காரணமாக சிலருக்கு வீடு வாகன யோகங்கள் உண்டாகும் தாமதமாக சென்று கொண்டிருந்த திருமண பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வந்தது திருமணம் கைகூடும்

ஒன்பதில் குரு உதிரத்தை தருகிறது நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு எதிர்பார்த்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் ஐந்தில் கேது ஒரு அளவுக்கு நன்மை தருவதால் பெரிய துன்பங்கள் இல்லை இந்த பெயர்ச்சி உங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதாக அமைகிறது

 குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் இதுநாள் வரை இருந்து வந்த மனக்கசப்பு விலகும் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும் குழந்தைகளால் நன்மை உண்டாகும் பெற்றோர்கள் உறவுகள் நண்பர்கள் என்று அனைவரும் விரும்பியபடி இருப்பார்கள் அதனால் பெரிய நன்மைகள் உண்டாகலாம் பொதுவாக குடும்பத்தில் பொருளாதாரம் நன்றாக இருப்பதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும் தேவைகள் பூர்த்தியாகும்

 ஆரோக்கியம் :  பொதுவாக கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் பெரிய வியாதிகள் மருத்துவ செலவுகள் இருக்க வாய்ப்பில்லை ஆனால் மார்ச் 2022 முதல் ஐந்தில் வரும் கேது சிறு வியாதிகளை கொடுக்கும் மற்றும் செவ்வாய் சூரியன் சஞ்சாரங்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் டிசம்பர் 20 முதல் பிப்ரவரி 18 வரை வாழ்க்கை துணைவர் அல்லது பெற்றோர்கள் வழியில் கொஞ்சம் மருத்துவ செலவுகள் உண்டாகும் ஆரோக்கியம் பாதிப்பது அல்லது விபத்துக்கள் போன்றவற்றால் ஆனால் அது உடனே சரியாகிவிடும் இந்த காலகட்டங்கள் கவனமாக இருக்க வேண்டியது மற்றபடி ஆரோக்கியம் நன்றாக இருக்கும்

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

வணங்க வேண்டிய தெய்வம் &  நற்செயல்கள்:   முருகனை வழிபடுவது நன்மை தரும் அதேபோல் அனந்த பயணத்தில் இருக்கும் பெருமாளை சனிக்கிழமைகளில் சேவிப்பதும் நன்மை தரும்.  முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள் அது உங்களை நல்வழியில் கொண்டு செல்லும் மேலும் அருகிலுள்ள கோயில்களில் விளக்கேற்றி ஒரு வேளை பூஜைக்கான செலவுகளை ஏற்படும் நன்மை தரும் 

Related articles

Recent articles

spot_img