
இன்றைய பஞ்சாங்கம் – ஆக.13
ஶ்ரீராமஜயம் ஜய்ஸ்ரீராம் ஜய்ஸ்ரீராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆடி ~ 28 ( 13.8.2026 ) வியாழன் கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயணம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம் ~ ஆடி மாஸம் { கடக மாதம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ இரவு 10.37 PM வரை ப்ரதமை பின் த்விதீயை.
நாள் ~ { குரு வாஸரம் } வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ காலை 8.08 AM வரை ஆயில்யம் பின் மகம்.
யோகம் ~ வரீயான்.
கரணம் ~ க்ம்ஸ்துக்னம் / பவம்.
அமிர்தாதியோகம்~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00 PM.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30 AM
குளிகை ~ காலை 9.00 ~ 10.30 AM.
சூரிய உதயம் ~ காலை 6.06 AM.
சந்திராஷ்டமம் ~ காலை 8.07 AM வரை தனுர் பின் மகரம்
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~அ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ ப்ரதமை.
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.
காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை
பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

இன்றைய ராசிபலன்கள்
13.8.2026
மேஷம்
குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம் பக்கம் வீட்டாரிடம் இருந்து வந்த வேறுபாடுகள் மறையும். வியாபார விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். பணி புரியும் இடத்தில் பொறுமை காக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
அஸ்வினி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பரணி : அலைச்சல்கள் ஏற்படும்.
கிருத்திகை : பொறுமை காக்கவும்.
ரிஷபம்
தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதுவிதமான பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
ரோகிணி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். புதிய அணுகுமுறைகளால் நினைத்ததை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : மதிப்புகள் உயரும்.
கடகம்
எதிர்பார்த்த சில வேலைகளில் அலைச்சல்கள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தன வரவுகள் சாதகமாக இருக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தானிய தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூசம் : பிரச்சனைகள் குறையும்.
ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
சிம்மம்
சுய தொழில் நிமித்தமான சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். காது தொடர்பான இன்னல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : எண்ணங்கள் மேம்படும்.
பூரம் : புரிதல் ஏற்படும்.
உத்திரம் : இன்னல்கள் குறையும்.
கன்னி
உலகம் பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில செலவுகள் இருந்தாலும் சமாளிப்பதற்கான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் காணப்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்
உத்திரம் : புதுமையான நாள்.
அஸ்தம் : ஏற்ற இறக்கமான நாள்.
சித்திரை : மாற்றங்கள் பிறக்கும்.
துலாம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டாகும். சுப காரிய எண்ணங்கள் ஈடேறும். முயற்சிக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நெருக்கடியாக இருந்த சிக்கல்கள் குறையும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். நிர்வாக திறமைகளால் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : ஒத்துழைப்பு உண்டாகும்.
சுவாதி : மதிப்புகள் கிடைக்கும்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.
விருச்சிகம்
மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சிந்தித்து செயல்படவும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.
அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கேட்டை : புரிதல்கள் மேம்படும்.
தனுசு
பொது காரியங்களில் ஆர்வம் ஏற்படும். தாய் வழி உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வர்த்தக தொடர்பான சில ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். சமூக கல்விகளில் ஆதரவான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : ஆர்வம் ஏற்படும்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
மகரம்
பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். உயர் அதிகாரிகளுடன் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : குழப்பங்கள் உண்டாகும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : நிதானத்துடன் செயல்படவும்.
கும்பம்
சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கான பாராட்டுகள் கிடைக்கும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : அனுகூலமான நாள்.
பூரட்டாதி : எண்ணங்கள் கைகூடும்.
மீனம்
உத்தியோக பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வரவைக் காட்டிலும் செலவு மேம்படும். கூட்டாளிகளுடன் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மேன்மை உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : வாதங்கள் நீங்கும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.
இன்றைய நற் சிந்தனைகள்
விடாமுயற்சி
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

தினம் ஒரு திருக்குறள்
நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்
அதிகாரம் : படைச்செருக்கு
குறள் 775
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
இன்றைய சிந்தனைக்கு
”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”
‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…
எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !
பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!
நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!
இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!
ஆம் நண்பர்களே…!
‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!
?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??
- தினசரி.காம்

