February 19, 2026, 10:59 PM
26.7 C
Chennai

2019 வருட ராசிபலன்: மேஷம்

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
(01.01.2019 முதல் 31.12.2019 வரை)


கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது.  ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார். 

mesham rasi - 2026

மேஷ ராசி (அஸ்வினி, பரணி , க்ருத்திகை 1ம் பாதம் முடிய) :

இந்த வருடம் குரு 8லும் ராகு மார்சுக்கு பின் 3லும், கேது சனி 9லும் சஞ்சரிக்கின்றனர். குருவால் பெரிய நன்மைகள் ஏதும் இல்லை அதிசார வக்ரமாய் தனுருக்கு பெயரும் போது ஓரளவு நன்மையை செய்கிறார்.

அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம். எந்த முடிவையும் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி அதன்படி செய்வது நன்மை தரும்.

உடல் ஆரோக்கியம்:

குரு 8ல் இருப்பதால் மன அழுத்தம், அவசரம் பதட்டம் ஏற்படும், அதுமட்டும் அல்லாமல் சனி பகவான் 9ல் சஞ்சரிப்பதால் பெற்றோருடைய உடல் நலத்திலும் பாதிப்பு ஏற்படும்,  உங்களின் தசை புக்திகள் சரியாக இருந்தால் இவற்றின் பாதிப்புகள் குறையும். வருடத்தின் முதல் 3 மாதங்கள் இப்படி இருந்தாலும் 25.4.2019 முதல் அதிசாரமாய் தனுருக்கு போவதால் ஆகஸ்ட் 2019 வரை நிம்மதியாய் நோய்கள் பாதிப்பின்றி ஆரோக்கியமாய் இருக்கலாம் பின் செப்டம்பர் 2019 முதல் நவம்பர் 4ம் தேதி வரை திரும்ப மன அழுத்தம் பதற்றம் இருக்கும். இறை ப்ரார்த்தனை பலம் தரும்.

உறவுகள்:

ராகுவால் சற்று நிம்மதி இருந்தாலும் பொதுவாக நெருங்கின சொந்தங்கள், மனைவி பிள்ளை அல்லது பெற்றோர் உங்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் வகையில் இருப்பார்கள், பலவிதமான பிரச்சனைகளை சில நம்பிக்கைக்கு உறியவர்களால் ஏற்படும். இது நவம்பர் 4,2019 முடிய இருக்கும் அதன் பின் தான் நல்ல நிலை உண்டாகும்.

வேலை/உத்தியோகம்:

ரொம்ப எதிர்பார்க்காமல் கடுமையாக உழைத்து வர வேண்டி இருக்கும், சிலருக்கு வேண்டாத இடத்துக்கு மாற்றல் இருக்கும், பதவி உயர்வை எதிர்பார்த்து வேலை செய்ய வேண்டாம், அரசு ஊழியர்களுக்கு கட்டாய காத்திருப்பு அல்லது பிடிக்காத ட்ரான்ஸ்பர் என்று இருக்கும். குரு தனுருக்கு அதிசாரமாய் செல்லும் போது கொஞ்சம் மகிழ்ச்சியை தருவது போல உத்தியோகம் அமைந்திருக்கும். வேலை தேடுவோருக்கும் மார்ச் கடைசியில் வேலை கிட்டும். நவம்பர் 4 முதல் நல்ல நிலை உண்டாகும் அது வரை பொறுமை அவசியம்.  தேவையில்லாத பிரச்சனைகளில் வாயை கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம் பெண் தொழிலாளிகளுடன் மேலதிகாரிகளுடன் மோதல் வேண்டாம்.

தொழில்/வியாபாரம் :

அதிக போட்டி சூழ்ச்சிகளை சந்திக்க வேண்டி இருக்கும், சம்பளத்துக்காகவோ அல்லது தொழில் வளர்ச்சிக்காகவோ கடன் வாங்க வேண்டி இருக்கும் அதனால் மன அழுத்தம் ஏற்படும். கடன் கொடுத்தவர் தொல்லை தருவார். எதிரிகளை சமாளிக்க எப்போதும் கவனமாய் இருத்தல் வேண்டும். வங்கி கடன் கிடைப்பதும் கடினமாய் இருக்கும். நம்பிக்கை நிறைந்தவர்களே கெடுதல் செய்வர். நவம்பர் 4, 2019 வரை கொஞ்சம் பொறுமை காத்து நிதானமாக செயல்களை செய்ய வேண்டும். தொழிலாளர் மூலமும் பிரச்சனை ஏற்படும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் நவம்பருக்குமேல் தொடங்கலாம்.

கலைஞர்கள்:

மறைமுக எதிர்களாலும் சக கலைஞர்களாலும் அதிக தொல்லை ஏற்படும் ஒப்பந்தங்கள் கிடைப்பதே அரியதாயிருக்கும். வீண் விவாதம் வேண்டாம், கடன் வாங்கும் சூழல் உண்டாகும் இந்த வருட கடைசி வரை பொறுமையாய் இருத்தல் அவசியம் நல்ல சூழல் இல்லை.

அரசியல்வாதிகள் :

மேலிடத்தில் பணிவுடன் இருப்பது நல்லது சிலருக்கு பண பாதிப்பு அதிகமாகும் தொண்டர்கள் விலகும் நிலை ஏற்படலாம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம், தேர்தலில் அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். செலவழித்தாலும் ஜெயிப்பது மிக கடினமாக இருக்கும். இந்த வருடம் முழுவதும் அமைதியாக இருத்தல் நலம் தரும்.

மாணவர்கள் :

இந்த 2019ம் வருடம் அவ்வளவு நன்றாக இல்லை மேஷராசி மாணவர்களுக்கு, கவனம் சிதறும் காதல் வயப்படும் அதனால் படிப்பு கெடும், மனதை ஒருமுக படுத்தி படிப்பில் கவனம் செலுத்துவது நலம் தரும். விளையாட்டு பந்தயங்களும் அவ்வளவு நன்மை தராது.

விவசாயிகள்:

மகசூல் குறையும், புதுப்பயிர்களில் லாபம் இராது, வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்யும் நிலை உண்டாகும், வழக்குகளும் சாதகம் இல்லை. புதிய வழக்குகளில் சிக்காமல் இருப்பது நலம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

பெண்கள்:

இந்த வருடம் வெகு சுமார் என்பதால் அதிக விவாதங்கள் செய்வதை தவிர்க்கவும், மனதை ஒருமுக படுத்தி எல்லோருடனும் அனுசரித்து போகுதல் நலம், உழைக்கும் மகளிருக்கு உழைப்பு கேற்ற பலன் கிடைக்காது. கணவருடன்/ குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து செல்வது மனதில் நிம்மதியை தரும். புதிய முயற்சிகளில் இறங்கவேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வமும், ப்ரார்த்தனைகளும்:

குருவுக்கு, ராகுவுக்கு அர்ச்சனை, வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சைபழ விளக்கு ஏற்றுதல், நவக்ரகங்களில் வியாழக்கிழமை குருவுக்கு அர்ச்சனை செய்வது, அனுமனுக்கு துளசி மாலை சாற்றுங்கள், ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். முடியாதோருக்கு சரீர ஒத்தாசை செய்யுங்கள்.

வருட பலன்கள்-2019 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories