ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
(01.01.2019 முதல் 31.12.2019 வரை)
கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது. ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார்.
ரிஷப ராசி(க்ருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2பாதம் முடிய) :

செவ்வாய்,சுக்ரன் சாதகமான நிலை ஆண்டின் துவக்கம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தேவைகள் பூர்த்தி ஆகுதல், தொழிலில் மேன்மை உண்டாகுதல், குருவின் பார்வை தரும் பலம் எதையும் சமாளிக்க வைத்துவிடும், கெடுதல் மறைந்து நன்மை உண்டாகும்
ராகுவின் சஞ்சாரம் கடகத்தில் அது பலவிதமான நன்மைகளை தரும், பொருளாதார வளம் மேம்படும். சிலருக்கு வெளிநாட்டு யோகம் உண்டாகும், கேதுவால் முயற்சிகளில் தடை வரலாம்
சனியின் 8ம் இடம் அலைச்சலையும் மன தளர்வையும் உண்டாக்கும், எனினும் கஷ்டம் அதிகம் இருக்காது. குடும்பத்தினருடன் ஒற்றுமையாய் எல்லா செயல்களையும் குருவின் பார்வையை கொண்டு முடித்து வெற்றி காணலாம். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகமும் முயற்சிகளில் வெற்றியும் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம் :
குரு 7ல் இருப்பதாலும் லாபத்தில் செவ்வாய் இருப்பதாலும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீண்டகாலமாக இருந்துவந்த மன அழுத்தம் பெரிய நோய்கள் விரைவில் சரியாகிவிடும். இருந்தாலும் மார்ச்சில் வரும் ராகு-கேது பெயர்ச்சியும், ஏப்ரலில் குருவின் அதிசாரமும் கொஞ்சம் தளர்வை கொடுக்கும், சரியான மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். கேதுவால் பெற்றோர்கள் / குடும்ப உறவுகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்க படலாம் கவனம் தேவை, நவம்பர் 4 முதல் மீண்டும் ஆரோக்கியம் மேம்படும்.
உறவுகள் :
பெற்றோர்கள் நிலையும் நன்றாக இருக்கும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும் பிள்ளைகளால் சந்தோஷம் நிறைந்திருக்கும். வேலை நிமித்தம் பிரிந்து இருப்பவர்கள் இந்த வருடம் ஒன்று சேருவார்கள் பொதுவில் இந்த 2019 வருடம் உறவுகளை மேம்படுத்தும்.
உத்தியோகம் :
பொதுவா அஷ்டம சனி உங்கள் தொழிலை பாதிக்கும் ஆனாலும் 7ல் இருக்கும் குருவும் 3ல் இருக்கும் ராகுவும் நல்ல நிலையை கொடுத்து உத்தியோக உயர்வு, சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் எல்லாவற்றையும் தரும். ஏப்ரல் 25 முதல் ஆகஸ்ட் 11 வரை கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும் தேவையற்ற இடமாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் ஏற்படும் அதிக கவனத்துடன் பணி செய்வது நன்மை தரும்.
தொழில்/வியாபாரம் :
பங்கு சந்தையில் இருப்போருக்கு குருவால் கொஞ்சம் ஏற்றம் இருக்கும் ஜனன ஜாதகத்தில் தசை புக்திகள் சாதகமாயிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் லாபம் இருக்கும். தொழிலில் ஒரு ஏற்றம் இருக்கும். அஷ்டம சனியும் ஏப்ரலில் அதிசாரமாய் குரு 8ல் பெயர்வதும் கொஞ்சம் தொழில் தடையை கொண்டுவரும் தேவையற்ற செலவுகளை கொடுக்கும். பொதுவில் ஒரு மந்த நிலையும் தொழிலில் நஷ்டமும் ஏற்படும்.
கலைஞர்கள் :
சந்தோஷமும் கஷ்டமும் கலந்து வரும் இந்த வருடம், சில ஒப்பந்தங்கள் குரு 7ல் இருப்பதால் கிடைத்தாலும் அஷ்டம சனியும், மார்ச்சுக்கு பின் 8ல் வரும் கேதுவும் விரயத்தை தந்து பலனை குறைத்துவிடுகின்றனர். நண்பர்களே ஏமாற்றுவார்கள் ஆகஸ்ட் முதல் நவம்பர் 4 வரை மறுபடியும் நன்மை உண்டாகும். எதிலும் கவனம் நிதானம் தேவை.
அரசியல்வாதிகள் :
பிறந்த ஜாதகம் நன்றாக இருந்தால் அஷ்டம சனி மற்றும் மார்ச்சில் பெயர்ச்சியாகும் அஷ்டம கேது பெரிய பிரச்சனை தராது குருவால் வருட ஆரம்பம் நன்றாக இருக்கும் மேலிடத்தில் செல்வாக்கு உயரும், தொண்டர்களிடம் நெருக்கம் இருக்கும். பண புழக்கம் தாராளம், இருந்தாலும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலும் பின் நவம்பர் 4 முதலும் அதிக சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும். நிதானத்தை கடைபிடிப்பது நலம் தரும்.
மாணவர்கள் :
வருட ஆரம்பம் நன்றாக இருக்கிறது. விரும்பிய கல்லூரி கிடைக்கும், விருப்ப பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள், விளையாட்டு பந்தயங்களில் வெற்றி கிட்டும். அஷ்டம சனியும் ஏப்ரலில் அதிசாரமாய் தனுருக்கு செல்லும் குருவும் கேது இவை தடையை உண்டாக்கி அதிகம் உழைக்க வைக்கும். எதிலும் கவனத்துடன் இருந்தால் படிப்பை தொடர முடியும்.
விவசாயிகள் :
மகசூல் ஆரம்பத்தில் நன்றாக இருக்கும், வருமானம் பெருகும், வழக்குகளில் சாதக நிலை இருந்தாலும் அஷ்டம சனியும், மார்ச்சில் 8ல் வரும் கேதுவும் ஏப்ரலில் 8ல் வரும் குருவும் சில கஷ்டங்களை கொடுக்கும் ஏப்ரல் 25க்குள் புதிய முயற்சிகளை செய்யவும் அதன் பின் ஆகஸ்ட் 11 வரை பெரிய நன்மைகள் இருக்காது. புதிய வழக்குகளில் சிக்காமல் இருப்பது நலம் தரும்.
பெண்கள் :
வருட ஆரம்பம் நன்றாக இருக்கும், குடும்பத்தாருடன் சுற்றுலா புனித தலங்கள் செல்லும் வாய்ப்பு சிலருக்கு உண்டாகும் ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டாகும். சிலருக்கு திருமண யோகமும் குழந்தை பாக்கியமும் உண்டாக வாய்ப்புள்ளது. வருட மத்தியில் விட்டுக்கொடுத்தும் பொறுமையுடன் செல்வதால் பெரிய பாதிக்கள் உண்டாகாது. உழைக்கும் மகளிருக்கு ஏற்ற வருடம் இது விரும்பியது கிடைக்கும் செல்வம் சேரும்.
வணங்கவேண்டிய தெய்வமும் ப்ரார்த்தனைகளும்:
சனீஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி ஆஞ்சநேயர் ஆகியோருக்கு விளக்கேற்றி வழிபடுங்கள், ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவுங்கள், தர்ம கைங்கர்யங்களை நிறைய செய்யுங்கள் அம்பாள் ஸ்லோகங்கள் சொல்லி கொண்டிருங்கள்.
வருட பலன்கள்-2019 கணித்து வழங்குபவர்…
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM



