February 19, 2026, 10:59 PM
26.7 C
Chennai

2019 வருட ராசிபலன்: மிதுனம்

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
(01.01.2019 முதல் 31.12.2019 வரை)


கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது.  ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார். 

மிதுன ராசி(மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதம் முடிய) :

midhunam rasi - 2026

வருட ஆரம்பம் ராசி நாதன் புதன் சாதகம், குருவின் அதிசாரவக்ரம் ஏப்ரல்25 முதல் ஆகஸ்ட் 11 வரை மிக சாதகம், சனியின் நிலை அவ்வளவு பெரிய கஷ்டம் எதுவும் வராது. குருவால் இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும், ராகுவால் பெரிய நன்மை கிடையாது, செவ்வாயின் சஞ்சாரத்தால் புதிய வீடு வாங்கும் யோகம் அல்லது வசதியான வீட்டுக்கு குடிபோகுதல் போன்றவை வருட ஆரம்பத்தில் அதிக நல்ல பலனை தரும், கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போவதால் சிறு சிறு பிரச்சனைகள் தீரும், ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதி நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். இந்த வருடம் பரவாயில்லை என்று சொல்லும்படியாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம் :

குரு 6ல் , சனி கண்டச்சனியாக 7ல் , ராகு பெயர்ச்சியும் சாதகமில்லா நிலையில் உடல் பாதிப்புகள் அதிகம் ஏற்படும், அதிக அக்கறையுடன் உடலை பேணுவது அவசியம். மேலும் குடும்பத்தினர் குறிப்பாக மனைவி/கணவர் உடல் நிலையும் கொஞ்சம் பாதிப்பை தருவதால் சரியான மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வது நலம், ஏப்ரல் 25முதல் அதிசாரமாய் குரு 7ல் பெயர்வது ஓரளவு முன்னேற்றத்தை தரும், பின் வருட கடைசியில் நவம்பர் 4முதல் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உறவுகள் :

இந்த வருடத்தில் அநேக சமயங்களில் கிரஹ சஞ்சாரங்கள் சாதகமாயில்லை, தேவையில்லாத பிரச்சனைகள் குடும்ப உறவுகளுக்குள் சண்டைகள் போன்றவை உண்டாகும், மன அழுத்தம் ஏற்பட்டு உடல் பாதிப்பும் இருக்கும். கணவன்/மனைவி,பெற்றோர் என்று உறவுகளை சமாளிப்பது கடினம் அதிக பொறுமை தேவை விட்டுக்கொடுத்து செல்வதும் நலம் தரும். ஏற்கனவே விவாகரத்து வழக்கு இருந்தால் அதில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகாது மேலும் இந்த வருடம் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் கவனம் தேவை.

உத்தியோகம்:

6ல் குரு அரசியலை செய்வார் தைரியமாக இருந்து பல சவால்களிய சந்திக்க நேரிடும். மார்ச் 2019 முதல் ஜென்மத்தில் வரும் ராகுவாலும் பிரச்சனைகள் அதிகரிக்கும், எதையும் எதிர்பார்த்து செய்வது பலன் தராது. கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும், அனைவருடனும் ஒத்து போக வேண்டிய சூழல் உண்டாகும், வேலை போகும் நிலையும் சிலருக்கு உண்டாகும், புதிய வேலை கிடைப்பது ஏப்ரல் 25 வரை தள்ளி போகும். வேலையை முடிப்பதில் இழுபறி உண்டாகும். ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் பிரச்சனைகள் குறையும்.

தொழில்/வியாபாரம் :

இந்த வருடம் தொழில் சாதகமாயில்லை, அடுத்தவருடமும் இந்த கஷ்டங்கள் தொடர்ந்து வரலாம் உங்கள் பிறந்த ஜாதகத்தை கொண்டு அதன் நிலை அறிந்து அதன்படி நடப்பது உத்தமம். வங்கி கடன் புதிய தொழில் முயற்சி அதிக பலனை தராது, போட்டிகள், சூழ்ச்சிகள் வருடம் முழுவதும் இருக்கும். கடன் தொல்லையால் அவதியும் உண்டாகும். கொஞ்சம் கவனமும் பொறுமையும் அவசியம்.

கலைஞர்கள் :

மீடியா போன்ற துறையில் இருப்போருக்கும், சினிமா காரர்களுக்கும் இந்த வருடம் சரியில்லை. கண்டச்சனியால் சில வாய்ப்புகள் வந்தாலும் ஜென்ம ராகுவும் 6ல் இருக்கும் குருவும் தடைகளை உண்டுபண்ணி கஷ்டத்தை கொடுப்பார்கள், மேலும் பணப்புழக்கம் குறைவாக இருக்கும், எல்லோருடனும் அனுசரித்து போவது நலம் தரும். பொறுமை அவசியம்.

அரசியல்வாதிகள் :

மறைமுக எதிரிகளால் பெயர் கெடும், புகழ் மங்கும், எதிர்ப்பை சமாளிக்க மிகுந்த போராட்டம் தேவை, அதிசாரமாய் குரு 7ல் வரும்போது ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டம் ஓரளவு முன்னேற்றத்தை தரும், பதவி தேடி வரும், பணப்புழக்கம் தாராள்ம இருந்தாலும் இந்த வருடம் முழுவதும் சுமார் பலனை தரும்.

மாணவர்கள்:

சாதகமான கிரஹ நிலைகள் இல்லாததால் இந்தவருடம் மிக கடுமையாக உழைத்து படிக்க வேண்டும். மேல்படிப்பு தடைபடலாம், அல்லது விரும்பிய படிப்பு கிடைக்காமல் போகலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டுவது கடினம், பெற்றோர் ஆசிரியர் சொல்படி நடப்பது நலம் தரும். அதிக கவனத்துடன் படிப்பது பலன் தரும்.

விவசாயிகள்:

எதிர்பார்த்த மகசூல் கிடைப்பது கடினம், அதிகம் பாடுபட வேண்டி இருக்கும், மழை பொழிவதும் கொஞ்சம் கடினமாயிருப்பதால் பயிர் வளம் குறைவாக இருக்கும், மனம் பதட்டம் உண்டாகி தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும், பொறுமையும் நிதானமும் தேவை வழக்குகள் சாதகமற்ற நிலை உண்டாகும், புதிய வழக்குகளில் சிக்காமல் கவனமாயிருத்தலும் அவசியம்.

பெண்கள்:

இந்தவருடம் சந்தோஷம் துக்கம் இரண்டும் கலந்து வரும், சில புனித யாத்திரைகள் குடும்ப சுற்றுலா போன்று சிலர் சென்று வருவர், அதே நேரம் குடும்பத்தினருடனும் அக்கம்பக்கதார் கூடவும் பொறுமையுடனும் விட்டுக்கொடுத்து போக வேண்டிய சூழலும் உண்டாகும். பெரிய பாதிப்புகள் என்றால் உடல் ஆரோக்கியம் கெடும், சில பிரிவினைகள் உண்டாகும் எதிலும் கவனம் தேவை, உழைக்கும் மகளிருக்கு அதிக பலனை எதிர்பார்க்க முடியாது கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வமும், ப்ரார்த்தனைகளும்:

தான தர்மங்களை நிறைய செய்யுங்கள், பெருமாள் தாயாரை வணங்கி வாருங்கள். முடிந்தால் பெருமாள் தாயாருக்கு வஸ்திரம் வாங்கி சாற்றுங்கள், ஏழைகளுக்கு உணவு உடை கொடுங்கள். அனுமனுக்கு விளக்கேற்றுங்கள்.

வருட பலன்கள்-2019 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories