2019 வருட ராசிபலன்: கடகம்

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
(01.01.2019 முதல் 31.12.2019 வரை)


கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது.  ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார். 

கடக ராசி(புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய) :

katakam rasi - 2026

இந்த வருடம் மிக சூப்பரான வருடமாய் அமைகிறது. குரு 5ம் இடத்தில், சனி 6ல் மேலும் ஜென்மத்தில் இருக்கும் ராகு மார்ச் முதல் 12ல், கேது 6ல் இப்படி கிரஹங்கள் சாதகமாய் இருப்பதால் நினைத்தவை நிறைவேறும், நீண்டகால கனவுகள் நிறைவேறும், பொருளாதார வளம் கூடும், எதிலும் வெற்றி என்ற நிலை உண்டாகும்,  எல்லோர் மத்தியிலும் முக்கியமானவர் என்ற அந்தஸ்தை பெறுவீர்கள், சிலருக்கு திருமணம் கைகூடும், 5ல் குரு இருப்பதால் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து காத்து இருந்தோருக்கு குழந்தை செல்வம் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்:

மார்ச்சில் ராகு பெயர்ச்சியும், சாதகமான சனியும் மற்றும் குருவும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், நீண்ட நாள் வியாதிகள் குணமாகும், குடும்பத்தினர் உடல் தொந்தரவுகளும் சரியாகும், அறுவை சிகிச்சை மேற்கொள்ள விரும்புகிறவர்கள் ஏப்ரலுக்குள் செய்து கொள்ளலாம் அல்லது ஆகஸ்டுக்கு பின் செய்து கொள்ளலாம். பெரிய பாதிப்புகள் ஏதும் இன்றி உடல் நிலை நல்ல முன்னேறம் உண்டாகும், குடும்ப அங்கத்தினர் உடல் நலமும் நன்றாகும்.

உறவுகள் :

மகிழ்ச்சியான குடும்ப சூழல்கள் உண்டாகும், பிரிந்திருந்தவர்கள் சேருவர், கணவன் மனைவிக்குள் அந்யோன்யம் உண்டாகும், பெற்றோர் சகோதரவகையிலும் ஒற்றுமை மேம்படும் பிள்ளைகளால் அதிக மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களிடம் உங்களுக்கு நல்ல மரியாதை இருக்கும். குரு அதிசாரகாலத்திலும் பின் நவம்பர் 4ல் குரு தனுவிற்கு பெயர்ந்தாலும் கூட சனி ராகுவால் உங்கள் மகிழ்ச்சி நீடிக்கும். பெரிய துன்பங்கள் இருக்காது இல்லத்தில் சுப நிகழ்வுகளால் உறவுகளின் நிலை மேம்படும்.

உத்தியோகம் :

சிறப்பான வளர்ச்சியை பெறும்படியாக உத்தியோகம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் இவை ஏற்படும் நல்ல உத்தியோகத்துக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு விரும்பியபடி கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டும், வருமானம் கூடுதலும் இருக்கும், வேலையில் அதிக விருப்பமும் சுலபமாக செய்ய கூடிய நிலையும் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிலருக்கு வேலை நிரந்தரமாகும். அரசாங்கத்தில் ஊழியம் செய்வோருக்கு பணி உயர்வு உண்டாகும்.

தொழில்/வியாபாரம்:

புதிய தொழில் தொடங்க நினைக்கும் கடகராசிக்காரர்களுக்கு இது நல்ல வருடம், உற்சாகம் நிறைந்திருக்கும், முதலீட்டாளர்களிடமிருந்து பணம் கிடைக்கும், பணவரவு தாராளம், தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். போட்டியாளர்கள் சரணடைவர், புதிய தொழில் விஸ்தரிப்பும் செய்யலாம், வங்கி கடன்கள் தாராளமாக கிடைக்கும், உங்கள் லாபத்தை நிலத்தில் முதலீடு செய்யலாம் அது பின்னாளில் பெரிய பலனை தரும்.

கலைஞர்கள்:

நிறைய ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும், மீடியாவில் இருப்பவர்களுக்கு பெயரும் புகழும் உண்டாகும், பணப்புழக்கம் தாராளம், நினைத்ததை சாதிக்க வாய்ப்புகள் உண்டாகும், சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வது நல்லது, அரசாங்க விருது பாராட்டுகள் ரசிகர்களின் ஆதரவு என்று இந்த வருடம் முழுவதும் திக்குமுக்காட வைக்கும்.

அரசியல்வாதிகள்:

பதவி தேடிவரும், தொண்டர்களிடத்தில் செல்வாக்கு உயரும், மக்கள் செல்வாக்கும் கூடும், மேலிடத்தில் நல்ல பெயர் உண்டாகும், இதுவரை வழக்குகள் வரி பிரச்சனைகள் இருந்தால் இந்த வருடம் அதிலிருந்து வெளி வருவீர்கள், நல்லகாலம் இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மாணவர்கள்:

படிப்பில் நல்ல கவனம் இருக்கும். நன்றாக படித்து அதிக மதிப்பெண்களிய பெறுவீர்கள், விரும்பிய பாடம் கிடைக்கும், சிலருக்கு வெளிநாட்டில் சென்று படிக்கும் யோகம் உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும், பெற்றோர் ஆசிரியர் நன்மதிப்பை பெறுவீர்கள்.

விவசாயிகள்:

அதிக விளைச்சல் உண்டாகி வருமாணம் பெருகும், கால் நடைகள் மூலமும் வருமானம் உண்டாகும். புதிய நிலம் வீடு வாங்குவர் சிலர், வழக்குகள் மிகுந்த சாதகமாய் அமையும், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளும் நடக்கும், சேமிக்க நேரம் இது.

பெண்கள் :

மகிழ்ச்சியான வருடம், குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் பெருகும். தீர்த்த யாத்திரைகள், சுப நிகழ்வுகளால் அந்யோந்யம் பெருகுதல், கணவன் மனைவி ஒற்றுமை, ஆடை ஆபரண சேர்க்கை, புதிய உறவு வருகை என்று நன்றாகவே இருக்கும், உடல் ஆரோக்கியம் பெருகும். உழைக்கும் மகளிருக்கு விரும்பியது கிடைக்கும், யோகம் அதிகம் உண்டாகும், மகிழ்ச்சி பெருகும்.

வணங்கவேண்டிய தெய்வமும் ப்ரார்த்தனைகளும்:

இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள் மேலும் சாஸ்தா, அம்பிகை, லக்ஷ்மீ இவர்களை வணங்குங்கள், முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள் சரீர ஒத்தாசையை முதியோர் இயலாதோருக்கு செய்யுங்கள். அதிக தான தர்மங்களை செய்யுங்கள்.

வருட பலன்கள்-2019 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

Topics

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Entertainment News

Popular Categories