December 5, 2025, 3:38 PM
27.9 C
Chennai

2019 வருட ராசிபலன்: சிம்மம்

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
(01.01.2019 முதல் 31.12.2019 வரை)


கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது.  ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார். 

சிம்ம ராசி(மகம், பூரம் , உத்திரம் 1ம் பாதம் முடிய) :

simham rasi - 2025

கடந்த வருடத்தை விட இந்த வருடம் மிக நன்றாக இருக்கிறது. குரு 4,5 ராசிகளில் சஞ்சரித்து பார்வையால் பல நன்மைகளை செய்வார், சனி சில பிரச்சனைகளை தந்தாலும் மார்ச் 2019 முதல் ராகு லாபத்தில் சஞ்சரிப்பதால் அதிக சந்தோஷம் உண்டாகும். பெரிய பிரச்சனைகள் இருக்காது, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்து புதிய உறவுகளை கொண்டு வரும், உடல் ரீதியான சில பிரச்சனைகள் இருந்தாலும் சரியான மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வீர்கள் பொருளாதார வளம் மிக நன்றாக இருக்கிறது, பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தீர்த்த யாத்திரைகள், சுற்றுலா செல்வீர்கள், புதிய திட்டங்கள் பலனை தரும்.

உடல் ஆரோக்கியம் :

சனி 5ல் சஞ்சரிப்பதால் மன அழுத்தம், வலி பிரச்சனை என்று உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் இருந்தாலும் மார்ச்சில் ராகு பெயர்ச்சியும் ஏப்ரலில் குரு பெயர்ச்சியும் சேர்ந்து ஆரோக்கியத்தை கொடுக்கும், பெரிய கஷ்டங்கள் வராது இருந்தாலும் ஆகஸ்ட் முதல் நவம்பர் 4 வரை திரும்ப உடல் பாதிப்புகள் உண்டாகும். எதிலும் அதிக அக்கறை எடுத்து செயல்பட வேண்டும், குடும்பத்தினருடய உடல் ஆரோக்கியத்திலும் மேற்படி காலத்தில் பாதிப்பு ஏற்படும்

உறவுகள் :

கடந்த வருடத்தில் இருந்ததை விட கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும் ஆனாலும் சனி கொஞ்சம் பிரிவையும் சண்டையையும் தருவார் மேலும் கேது மார்ச்சில் சனியுடன் இணைந்து உறவுகளுடனான பிரச்சனையை அதிகரிப்பார். குருவின் பார்வையால் நல்ல நிலை உண்டாகும். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள் சனி கேது சேர்க்கையால் அதே நேரம் குருவும் சேர்வதால் கொஞ்சம் நல்ல நிலை உண்டாகும், கணவன் மனைவிக்குள் பிரிவை உண்டாக்க சனி முயற்சிக்கும் ராகுவால் அது விலகும். பொதுவில் உறவுகள் நல்ல நிலையில் இருக்கும்.

உத்தியோகம்:

இந்தவருடம் உத்தியோகத்தில் நல்ல நிலை உண்டாகும், பதவி உயர்வு சம்பள உயர்வு, என்றும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் வேளு பளு குறைதலும், மகிழ்ச்சி அதிகரித்தலும் இருக்கும். விண்ணப்பங்கள் பூர்த்தியாகும், புதிய வேலைக்கு முயற்சித்தலை ஏப்ரல் முதல் ஜூலை க்குள் வைத்து கொள்வது நல்லது, நவம்பர் 4முதல் கொஞ்சம் கவனம் தேவை அதிக உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். விரும்பிய இடத்துக்கு மாறுவதை ஏப்ரல் முதல் ஜூலைக்குள் வைத்துக்கொள்வதும் நல்லது.

தொழில்/வியாபாரம்:

பணப்பிரச்சனை தீரும், அசையா சொத்துக்களை விற்று கடனை அடைப்பீர்கள், தொழிலில் மிகுந்த வளர்ச்சியை காணலாம், போட்டிகள் மறையும், வங்கி கடன்கள், புதிய கடன்கள் கிடைக்கும், வியாபாரத்தில் அதிக லாபம் உண்டாகும், ஊழியர்கள் லாபத்தை தருவர், இருந்தாலும் புதிய விஸ்தரிப்பு போன்ற முயற்சிகளை ஏப்ரல் முதல் ஜூலைக்குள் வைத்து கொள்ளவும், நவம்பர் 4க்கு பின் நல்ல நிலை உண்டாகும்.

கலைஞர்கள் :

சனியால் மன வருத்தம் இருந்தாலும் 4ல் சஞ்சரிக்கும் குருவும், மார்சில் லாபத்தில் வரும் ராகுவும் அதிக வாய்ப்புகளிய தந்து பொருளாதார ஏற்றத்தை தருவர். புதிய உறவுகளில் அதிக கவனம் தேவை கேளிக்கைகளிலும் கவனம் தேவை, சனி கேது இணைவதால் உங்களுக்கு தீய பழக்கங்கள் ஏற்பட்டு அடிமையாகலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அரசியல்வாதிகள்:

ஓரளவு நல்ல நிலை இருக்கும், எதிரிகள் சமயம் பார்த்து கொண்டிருப்பர், சனியால் சில அவப்பெயர்கள் உண்டாக வாய்ப்பு உண்டு. குருவால் நல்ல நிலை இருக்கும், ராகு பெயர்ச்சி நல்ல பதவியையும் பொருளாதார மேம்பாட்டையும் தரும், தொண்டர்கள் மன நிலை அறிந்து செயல்படுவது நல்லது. கொடுப்பதை அதிகரித்தால் மக்கள் செல்வாக்கு கூடும்.

மாணவர்கள்:

ராகு மற்றும் குருவால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். போட்டி பந்தயங்களிலும் வெற்றி உண்டாகும். சனி கேது இணைவால் நண்பர்கள் மூலம் கெடுதல் உண்டாகும், கவனம் தேவை, வருட கடைசியில் அதிக அக்கறை எடுத்து படிக்க வேண்டும்.

விவசாயிகள் :

பயிர் வளர்ச்சி சுமாராக இருக்கும், சனியால் நில பிரச்சனை உண்டாகும், வழக்குகள் புதிதாக உருவாகும், குரு, ராகுவால் ஓரளவு நிலமை சரியாகும், வீண் விவாதம் வேண்டாம், மானாவாரி பயிர்கள் மூலம் வருமானம் உண்டாகும், புதிய நிலம் வாங்குவதை ஏப்ரல்-ஜூலையில் வைத்து கொள்ளவும்.

பெண்கள்:

கடந்த வருடங்களை விட பரவாயில்லை என்ற நிலை இருக்கும், குடும்பத்தில் ராகுவாலும், குருவாலும் மகிழ்ச்சி பெருகி இருக்கும் அதேநேரம் சனி கேது சேர்க்கையால் சில பிரச்சனைகள் உண்டாகி பிரியும் நிலை இருக்கும். குருவின் பார்வை அதை தவிர்க்கும். உழைக்கும் மகளிருக்கு சுமாரான நிலை கடின உழைப்பால் நல்ல நிலை உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்வது நல்லது.

வணங்கவேண்டிய தெய்வமும் ப்ரார்த்தனைகளும்:

விநாயகர் அகவல் படியுங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் பிள்ளையாருக்கு விளக்கேற்றுங்கள், விஷ்ணு சகஸ்ர நாமம் படியுங்கள். ஏழை எளியோருக்கு பிள்ளையார் பெயரை சொல்லி அன்னதானம் செய்யுங்கள். பாக்கெட்டில் பிள்ளையார் படம் வைத்து கொள்ளுங்கள்.

வருட பலன்கள்-2019 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories