16/10/2019 7:42 AM
ராசி பலன்கள் வருட ராசி பலன்கள் 2019 வருட ராசிபலன்: கன்னி

2019 வருட ராசிபலன்: கன்னி

-

- Advertisment -
- Advertisement -

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
(01.01.2019 முதல் 31.12.2019 வரை)


கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது.  ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார். 

கன்யா ராசி(உத்திரம் 2.3.4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதம் முடிய) :

4ல் இருக்கும் சனியும் 3ல் குருவும், 5ல் கேதுவும் சோதனை மேல் சோதனையை கொடுத்து மிகுந்த துன்பத்தை தரும் வருடமாக இந்த வருடம் அமைகிறது. கடவுளை இஷ்ட தெய்வத்தை கெட்டியாக பிடித்து கொள்வது நலம் தரும். அர்த்தாஷ்டம சனி உடலையும் மனதையும் ரொம்பவே நோக செய்யும், பொருளாதார நிலையும் மந்தமாகும். தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்து தசை புக்திகளும் சாதகமாக இருந்தால் ஓரளவு பரவாயில்லை என்ற நிலை இருக்கும். மார்ச் 2019ல் ராகு பெயர்ச்சியும் அவ்வளவு சாதகம் இல்லை ஜனன ஜாதக தசாபுக்திகள் சாதகமற்று இருந்தால் வேலை பறிபோகும். உடல் ஆரோக்கியமும் சீர்கெடும். பொதுவில் இந்த வருடம் வெகு சுமார்.

உடல் ஆரோக்கியம் :

4ல் சனி உடல் ஆரோக்கியத்தை கெடுப்பார், மார்ச்சுக்கு பின் கேதுவும் இணைந்து வயிற்று வலி, உடல் வலி போன்று தந்து மருத்துவ செலவை உண்டாக்குவார். உங்கள் தசாபுக்திகள் சாதகமற்று இருந்தால் அறுவை சிகிச்சை போன்று உண்டாகும்.இந்த கால கட்டத்தில் மிக கவனமாய் இருத்தல் வேண்டும். தவறான பழக்கங்கள் வரக்கூடும் அதன் மூலமும் ஆரோக்கியம் கெடும். குடும்ப உறவுகள் உடல் ஆரோக்கியத்திலும் மருத்துவ செலவு கூடும். அதிக கவனம் தேவை.

உறவுகள்:

மனைவி/கணவன் உறவுகளில் பிரிவினை வரும் அளவில் வாக்குவாதம் இருக்கும், பெற்றோர்கள் சகோதர வகையினர், பிள்ளைகள் என்று எல்லா உறவுகளுடனும் வீண் வாக்கு வாதம் உண்டாகும். உங்கள் குழந்தைகள் தவறான வாழ்க்கை துணையை தேடுவதால் உங்களுக்கு அதிர்ச்சி உண்டாகும். இந்த வருடம் சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது சொந்த பந்தங்களுடன் விரோதம் உண்டாகும். பொறுமையுடன் அனைவரையும் அனுகுவது நல்லது. விவாகரத்து போன்ற சட்ட வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு எதிராக அமையும்.

உத்தியோகம்:

உங்கள் வாழ்வாதாரத்துக்காக உத்தியோகத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டிய வருடம் இது. உங்கள் பலவீனத்தை உடன் வேலை பார்ப்பவர் பயன்படுத்தி கொள்வர். அலுவலகத்தில் உண்டாகும் அரசியலால் மன அழுத்தம் கூடும், எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பது கடினம், உங்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தவர் பற்றி மேலதிகாரியிடம் புகார் கூற முயன்றால் அது உங்களுக்கே பாதகமாய் அமையும். இந்த வருடம் முழுவதும் அமைதியாகவும் பொறுமையுடனும் நிதானமாகவும் செயல்பட வேண்டும்.

தொழில்/வியாபாரம்:

உங்களுடைய பிறந்த ஜாதகம் நன்றாக இருந்தாலொழிய தொழிலில் முன்னேற்றம் என்பது இருக்காது. சனி,ராகு,கேது மற்றும் குரு உங்களுக்கு சாதகமான நிலையில் இல்லை, போட்டிகள் அதிகம் ஆகும். நிதிநிலமை மோசமாகும், அலுவலகத்தில் பணிகள் சரிவர இயங்காது. வங்கி கடன் தாமதம் ஆகும் தொழிலை நடத்த அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டி இருக்கும். ஏற்கனவே கடன்கொடுத்தவர்களின் அழுத்தம் அதிகரிக்கும். தொழிலை முடக்க சதி நடக்கும், அதிகம் நீங்கள் போராடி உங்கள் தொழிலை தொடர வேண்டிய நிலை

கலைஞர்கள்:

வளர்ச்சியில் தடை ஏற்படும் கையெழ்த்திட்ட ஒப்பந்தங்கள் சட்ட பிரச்சனையை கொண்டு வரும் எதிரிகள் உங்களை வீழ்த்த சதி செய்வார்கள், சக கலைஞர்களால் பிரச்சனை உண்டாகும். வருமானம் பாதிக்கும் மனம் சொல்ல ஒண்ணா துயர் உண்டாகும். எதிலும் நிதானம் பொறுமை அவசியம் கவனத்துடன் செயல் படுவது முக்கியம்.

அரசியல்வாதிகள்:

கட்சி மேலிடத்தில் செல்வாக்கு சரியும், உடன் இருப்பவர்களே சதி செய்வார்கள், தொண்டர்கள் செல்வாக்கும் குறையும் பணம் விரயம் ஆகும், வருமான வரி போன்ற அரசு வகையிலும் பிரச்சனை உண்டாகும் வீண் விவாதங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

மாணவர்கள்:

அதிக தடை, பிரச்சனை ஏற்ப்பட்டு மன வருத்தம், பதற்றம் உண்டாகி படிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைப்பது துர்லபம், வெளிநாட்டு படிப்பும் பாதியில் நிற்கும். பெற்றோர் ஆசிரியர் ஆலோசனைப்படி நடப்பது நலம் தரும். ஹயக்ரீவர் ஸ்லோகங்கள், சரஸ்வதி ஸ்லோகங்களை சொல்வது மனதை ஒருமுக படுத்தி படிப்பில் கவனத்தை செலுத்த உதவும்.

விவசாயிகள்:

விவசாயம் பாதிக்கும்படியாக பிரச்சனைகள் உருவாகும், நிலத்தினால் தகராறு வரும். பயிர்கள் சேதமாகும், கால்நடைகளாலும் செலவு உண்டாகும், வழக்குகள் தோல்விகாணும். வீண் விவாதங்களை தவிர்ப்பது புதிய வழக்குகள் உண்டாகாமல் தடுக்கும். புதிய நிலம் வாங்கும் எண்ணத்தை தள்ளி போடுவது நல்லது.

பெண்கள்:

வாக்குவாதங்கள் குடும்ப உறவை சிதைக்கும், அமைதியும் பொறுமையும் விட்டுக்கொடுத்து போகும் தன்மையும் நன்மை தரும். அக்கம்பக்கத்தாரோடு அனுகூல போக்கை கடைபிடிக்கவும். இந்த வருடம் முழுவதும் சுமாராக இருக்கும். உடல் நிலையில் பாதிப்பு வரும். குடும்ப உறவுகளுடன் சந்தோஷ குறைவு ஏற்படும். உழைக்கும் மகளிரும் மிகுந்த பொறுமையுடன் எல்லாவற்றையும் அனுகுவது நலம்பயக்கும். அதிகம் உழைக்க வேண்டி இருக்கும் பலன் இருக்காது. இந்த வருடம் சுமார்.

வணங்க வேண்டிய தெய்வமும் ப்ரார்த்தனைகளும்:  

சனி,குரு, ராகு ஸ்தலங்களுக்கு செல்லுங்கள் துர்க்கைக்கு விளக்கேற்றுங்கள், தக்ஷிணாமூர்த்தியை வழிபடுங்கள், சனீஸ்வரருக்கு அர்ச்சனை அல்லது அனுமனுக்கு வெண்ணை சாற்றுங்கள். ப்ரதோஷகாலங்களில் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள், அல்லது நரசிம்மர் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள், தான தர்மங்களை அதிகம் செய்யுங்கள்.

வருட பலன்கள்-2019 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

.

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: